சினிமா என்பது மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல, சமுதாயத்தின் பழுதுபோக்கும் ஒரு கருவியாகவும் இருக்க வேண்டும் என்று சிலர் சொல்வது உண்டு. ஆனால் இப்போதெல்லம் வரும் பெரும்பாலான படங்கள் கத்தி அரிவாள் துப்பாக்கி வெடிகுண்டு போன்ற போர்க் கருவிகளை எடுத்துக்கொண்டு வன்முறை களத்தை தான் திரைக்கதை என படமாக்கி ரசிகர்களுக்கு தருகின்றன.
அதிலும் அட்லி லோகேஷ் கனகராஜ் நெல்சன் கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்களுக்குள் யார் அதிக வன்முறை படங்களை தருவது என்பதில் ஒரு மறைமுக போட்டியே நிலவுகிறது. அதுவும் போதைப் பொருள் கடத்தல் வெடிகுண்டு துப்பாக்கி மனித உறுப்புகள் கடத்தில் ஆட்களை எரித்தல் போன்ற விஷயங்களை தாண்டி இயக்குனர்களுக்கு சிந்திக்கவே தோன்றுவதில்லை.
நடப்பாண்டில் அதாவது 2025ம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இதுவரை தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. இதில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் அதன் எண்ணிக்கை 10 கூட தாண்டாது என்பதுதான் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது.
குறிப்பாக டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் மதகஜ ராஜா குடும்பஸ்தன் போன்ற படங்கள் விமர்சன ரீதியான வெற்றியை பெற்றிருக்கின்றன. கூலி குட் பேட் அக்லி ரெட்ரோ மதராஸி போன்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியை பெற்றிருக்கின்றன. மாரீசன் போன்ற ஓரிரு படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கின்றன.
ஆக மொத்தம் தமிழ் சினிமாவில் 200 படங்களில் 20 படங்கள் கூட வணிக ரீதியாக வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை. கடந்தாண்டில் செப்டம்பர் மாதம் வரை 180 படங்களே வெளியான நிலையில் இந்த ஆண்டில் அது 200க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆனால் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை கூடவில்லை.
இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் 250க்கும் மேற்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி விடும். இனி வர உள்ள இட்லி கடை எல்ஐகே டியூட் காந்தாரா சாப்டர் 1 படங்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளன. ஆனால் காந்தாரா சாப்டர் 1 கன்னட மொழி படம்தான். ஜெயிலர் 2 கருப்பு ஜனநாயகன் பராசக்தி போன்ற படங்களை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது. அவை 2026ம் ஆண்டில்தான் திரைக்கு வருகிறது.





