- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக மாநில மாநாட்டுக்கு முன் தனது கட்சியினருக்கு அரசியல் பாடம் நடத்த முடிவெடுத்த நடிகர் விஜய்,...

தவெக மாநில மாநாட்டுக்கு முன் தனது கட்சியினருக்கு அரசியல் பாடம் நடத்த முடிவெடுத்த நடிகர் விஜய், கட்சி தலைமையின் திடீர் அறிவிப்பு – கட்சியினர் உற்சாகம்!

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 5ம் தேதி கேரள மாநிலம், பையனூரில் முதல் பாடல் காட்சி படப்பிடிப்பு துவங்கி நடந்து முடிந்த நிலையில், தற்போது தனது தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த விஜய் தயாராகி வருகிறார். மாநாடு பந்தல் அமைக்கும் பணிகள், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை கிராமத்தில் வெகு வேகமாக நடந்து வருகிறது.

இந்த மாநாட்டு விழா ஏற்பாடுகளை, 300 பேர் கொண்ட பணியாட்கள் குழு செய்து வருகிறது. மிக பிரமாண்டமான விழா மேடை. விழா பந்தல், செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பு, 1.50 லட்சம் பேர் உட்காரும் வகையில் இருக்கைகள் வசதி, உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவ முதலுதவி மற்றும் போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் என மிக பிரமாண்டமான முறையில் மாநாடு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. வருகிற 24ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, 27ம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும், தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தவெக மாநாட்டு பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கட்சித் தலைவரின் அறிவுறுத்தல்படி நமது கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கை திருவிழா குறித்து மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டு பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் நடக்கிறது.

- Advertisement -

நாளை 18ம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அரசியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இந்தப் பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டு இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை, கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை, பொறுப்புணர்வு, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் மாநாட்டை சிறப்பிப்பது, வெற்றிக் கொள்கை திருவிழா விளக்க உரை மற்றும் மாநாட்டு குழுக்களுக்கான கலந்தாய்வு குறித்து கருத்துரை வழங்க உள்ளனர்.

எனவே இந்த கலந்தாய்வில் அனைத்து குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கூறியிருக்கிறார். இது தவெக கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்