- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க மறுத்து திடீரென விலகிய பிரபல தயாரிப்பு நிறுவனம்...

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க மறுத்து திடீரென விலகிய பிரபல தயாரிப்பு நிறுவனம் – இதுதான் காரணமா?

- Advertisement -

காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சூரி. விடுதலை படம் மூலம் ஹீரோவான சூரி தொடர்ந்து கருடன் விடுதலை 2 மாமன் படங்களை தொடர்ந்து மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள படம் மண்டாடி. இந்த படம் வருகிற செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் மஹிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

மாமன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இந்த படத்தில் சூரி கடல் மீனவராக நடித்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. மண்டாடிகளை பற்றிய படம் என்பதால் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

மண்டாடி படத்தை தொடர்ந்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதலில் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் திடீரென விலகிய நிலையில் இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது.

- Advertisement -

மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு 2018 என்ற படம் வெளியானது. கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அதேபோல் நடிகர் சூரி நடிக்க உள்ள இந்த படத்தையும் இயக்குனர் ரவிக்குமார் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையப்படுத்தி எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோது நடந்த பிரச்னைகளை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. இதற்காக படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு மட்டுமே மொத்தம் 60 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட உள்ளது இப்படி விஎஃப்எக்ஸ்க்காக மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் ரூ. 60 கோடி ஒதுக்க வேண்டிய சூழலில் இந்த படத்தில் இருந்து ஏஜிஎஸ் நிறுவனம் ஒதுங்கிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் துணிச்சலாக முன்வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்