நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்போது இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதில் ரஜினி கமல் இருவரும் அவரவர் அறைகளில் கூலிங்கிளாஸ் உயரமான ஷூ பெல்ட் வாட்ச் என எடுத்து அணிகின்றனர். இதில் நெல்சனிடம் ரஜினி ஒவ்வொன்றையும் கமலுக்கு பிடித்ததா என்று கேட்டு கேட்டு அணிகிறார்.
அதே போல் வேறு ஒரு அறையில் கமலும் அதே போல் கூலிங்கிளாஸ் பெல்ட் என தேர்வு செய்து அணிந்துக் கொள்கிறார். இருவரும் அறையை விட்டு வெளியேறி ஒன்றாக கம்பீரமாக ஸ்டைலாக நடந்து வருகின்றனர். அப்போது அங்குள்ள கார் மெக்கானிக் சர்வீஸ் இளம் பெண்கள் இருவரையும் ஆசையாக பார்க்கின்றனர்.
ஆனால் பெண்களை கண்டுகொள்ளாமல் விண்டேஜ் கார் அருகே இருவரும் வரும்போது ரஜினி தன் கையில் உள்ள கார் சாவியை ஸ்டைலாக தூக்கி வீச கமல் அதை லாவகமாக கேட்ச் செய்கிறார். பிறகு காருக்குள் இருவரும் ஏறிக்கொள்ள கமல் டிரைவர் சீட் பகுதியில் உட்கார ரஜினிக்கு அவருக்கு அருகில் அமர்ந்து கொள்கிறார்.
அப்போது காரின் பின் சீட்டில் நெல்சன் அனிருத் இருவரும் அமர்ந்துக்கொள்ள என்ன டியூனில் பாட்டு வேண்டும் என்று கமலிடம் அனிருத் கேட்கிறார். அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதலில் ஹீரோ யாருன்னு சொல்லுங்க என்கிறார். அனிருத் அப்போது நெல்சனை நக்கலாக பார்க்க, முன்புறம் இருக்கும் ரஜினி, கேட்குறாங்கல்ல சொல்லுங்க ஜி ஹீரோ யார் என்கிறார்.
நெல்சன் பதில் சொல்லாமல் விழிக்க காரை விருட்டென வேகமாக கிளப்புகிறார் நடிகர் கமல்ஹாசன். நெல்சனும் அனிருத்தும் அதில் திடுக்கிட்டு தடுமாறுவதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது. முதல் பிரமோ வீடியோவே பெரிய அளவில் டிரண்டிங் ஆகி வைரலான நிலையில் படத்தில் ஹீரோவாக கமல் வில்லனாக ரஜினி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





