- Advertisement -
Homeபொழுதுபோக்குவரப்போகிற விஜய் சேதுபதி படத்தை எல்லாரும் இருக்கையின் முனைக்கு வந்து பார்ப்பீங்க... சூப்பராக பேசிய தயாரிப்பாளர்......

வரப்போகிற விஜய் சேதுபதி படத்தை எல்லாரும் இருக்கையின் முனைக்கு வந்து பார்ப்பீங்க… சூப்பராக பேசிய தயாரிப்பாளர்… அப்போ அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி போலயே…

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதிக்கு 2024 ஆம் ஆண்டு மிக அருமையாகவே அமைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, நாயகன் என்னும் பிம்பத்தை தாண்டி வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கேரக்டர்களில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். கடைசியாக ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் கூட அவர் வில்லன் கதாபாத்திரத்தை தான் ஏற்றிருந்தார்.

 

- Advertisement -

இது அவருக்கு இந்தி மொழியில் ஓபனிங் படமாக அமைந்தது. ஆனால், அந்த கேரக்டர் பெரிய அளவில் பேசப்படவில்லை. இப்படியான சூழலில் தான் இனி, ஹீரோ ரோலிங் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக விஜய் சேதுபதி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா வெளியானது.

 

- Advertisement -

குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் தான் இதனை எடுத்திருந்தார். நான் லீனியர் வகையில் இதன் திரைக்கதை எழுதப்பட, ரசிகர்கள் மகாராஜா திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். சாதாரண கதை தான் என்றாலும் அதை சுவாரசியமாக கூறியிருந்ததன் மூலம் மகாராஜாவை வெற்றி பெற செய்தார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

 

திரையரங்குகளில் இந்த திரைப்படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற நிலையில், ஓடிடி இல் வெளியாகி பிற மொழிகளிலும் பேசப்பட்டது. மிக முக்கியமாக, சீன நாட்டிலும் மகாராஜா திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வாகை சூடியது. இந்தத் திரைப்படம் கொடுத்த வெற்றியால் விஜய் சேதுபதி மகிழ்ச்சியில் இருக்கிறார்.

 

தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதில் மிஷ்கின் இயக்கத்தில், பிசாசு 2 படத்தில், சேமியா ரோலில் வருகிறார் விஜய் சேதுபதி. அதேபோல், ட்ரெயின் என்னும் திரைப்படத்தையும் விஜய் சேதுபதி ஹீரோவாக வைத்து மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், ட்ரெயின் திரைப்படம் மிக அருமையாக வந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக மிஸ்கினுடன் பணி புரியாமல் நான் மிஸ் செய்து விட்டேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் இருக்கையின் முனைக்கு வந்து பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்