தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர். தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் அர்ஜூன் சேவகன் போன்ற சில படங்களை அவரே டைரக்ட் செய்திருக்கிறார். பல படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். இப்போது தமிழில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் அதிகமாக நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அர்ஜூன் கதை எழுதி இயக்கிய படம் சீதா பயணம். இந்த படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை திருமணம் செய்த அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, இந்த படத்தில் திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு சீதா பயணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக நிரஞ்சன் சுதீந்திரா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புஷ்பா 2 படத்தின் இயக்குனர் சுகுமார் மற்றும் பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் உபேந்திரா கலந்து கொண்டார். நடிகர் உபேந்திரா சத்யம் என்ற விஷால் படத்தில் நடித்திருந்தார். இப்போது கூலி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்த விழாவில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் பேசியதாவது, உபேந்திரா போல சினிமாவில் அதிக ஆர்வமும் தீவிரமும் கொண்ட இயக்குனரை நான் பார்த்ததே இல்லை. ஓம் ஏ மற்றும் உபேந்திரா போன்ற படங்கள் என்னை அப்படியே பறக்க வைத்தன. நேர்மையாக சொன்னால் அந்த படங்களை எல்லாம் நான் இயக்கியிருந்தேன் என்றால் சந்தோஷமாக எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன்.
அந்த அளவிற்கு சினிமாவின் அடையாளங்களாக ஓம் ஏ உபேந்திரா போன்ற படங்கள் இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல சமீப காலமாக என்னுடைய படங்களின் கதை சொல்லும் புத்திசாலித்தனமான எதையும் நீங்கள் கவனித்திருந்தால் அது உபேந்திராவின் படங்களிலிருந்து வந்த இன்ஸ்பிரேஷன் ஆக நான் எடுத்துக் கொண்டதுதான்.
நான் மட்டுமல்ல, ஒவ்வொரு இயக்குனரும் அவரிடம் இருந்து இது போன்ற இன்ஸ்பிரேஷன்களை எடுத்துக் கொள்ள முடியும் என்று இயக்குனர் சுகுமாரன் பேசியிருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய் வசூலித்த மாபெரும் பிளாக் பஸ்டர் படம் புஷ்பா 2 படத்தை இயக்கிய சுகுமார், நடிகர் உபேந்திராவை இப்படி புகழ்ந்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
.





