அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் 2வது பாகம் வரும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்போது புஷ்பா 2 பாகம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர், நடிகையர் நடிக்க உள்ளனர். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்.
இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் நெருங்கிய நண்பராக நடித்தவர் ஜெகதீஷ், ராஷ்மிகா, அல்லு அர்ஜூன் காதலுக்கு அவர்தான் தூது போவார். எந்நேரமும் ஹீரோவுடன் இருக்கும் காமெடி பாத்திரத்தில் ஜெகதீஷ் நடித்திருந்தார். அவரது நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அதனால் புஷ்பா 2ம் பாகத்திலும், அல்லு அர்ஜூனுக்கு நண்பராக அதே கேரக்டரில் ஜெகதீஷ் நடித்து வருகிறார்.
இந்த சூழலில், படத்தில் துணை நடிகையாக நடிக்கும் ஒரு பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக வந்த புகாரை அடுத்து, கடந்த 6ம் தேதி ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். அவர் சிறைக்கு சென்றுவிட்டார்.அப்போது அவர் புஷ்பா 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு இருந்தார். அவர் திடீரென சிறைக்கு சென்றதால் படப்பிடிப்புக்குழு பாதிக்கப்பட்டது.
அதாவது அல்லு அர்ஜூனுடன் அவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் கைஐ செய்யப்பட்டதால் படப்பிடிப்பை இரண்டு வாரங்கள் வரை நடத்த முடியவில்லை. ஹீரோ அல்லு அர்ஜூன் படப்பிடிப்புக்கு வந்தாலும், ஜெகதீஷூம் அவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சியில் அவர் இல்லாததால், ஷூட்டிங் 2 வாரங்களாக தடைபட்டுள்ளது.
இதையடுத்து பெரிய லாயர் ஒருவரை பிடித்து 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, சிறையில் இருந்த காமெடி நடிகர் ஜெகதீஷை படக்குழு பெயிலில் வெளியே எடுத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் புஷ்பா 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு அல்லு அர்ஜூனுடன் நடித்து வருகிறார். இப்படி காமெடி நடிகர் படப்பிடிப்பு குழுவுக்கு சோகத்தை ஏற்படுத்தி விட்டதுதான் இதில் உச்சபட்ச காமெடியாக பேசப்படுகிறது.
படப்பிடிப்பில் பல பிரச்னைகள் வருவது சகஜம்தான். ஆனால் படத்தில் நடிக்க வேண்டிய முக்கிய நடிகர் இப்படி ஏதேனும் போலீஸ் வழக்கு என சிறை சென்றால் படப்பிடிப்பை நடத்த முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது தெலுங்கு சினிமா துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஜெகதீசை வெளியேற்ற செலவு செய்த பணம் ரூ. 15 லட்சம் தயாரிப்பு செலவில் சேருமா அல்லது, அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமா என்பது தெரியவில்லை.





