- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழகத்திலும் கமலுக்கு எதிர்ப்பா? மூர்க்கமான அவர்களை பெருமிதமாக குறிப்பிடலாமா? - விளாசித் தள்ளிய அரசியல் பிரபலம்!

தமிழகத்திலும் கமலுக்கு எதிர்ப்பா? மூர்க்கமான அவர்களை பெருமிதமாக குறிப்பிடலாமா? – விளாசித் தள்ளிய அரசியல் பிரபலம்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் தக்லைஃப் பட டைட்டிலுக்கு புதிய தமிழகம் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தக்லைஃப் என்ற பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. மிகவும் தவறான பொருள் கொண்ட Thug எனும் பெயர் கமலஹாசனால் பெருமிதப்படுத்த முயற்சிக்கப்படுகிறது. அந்த சொல் பெருமைப்பட உரியதல்ல.

ஏனெனில் Thug என்றால் பொறுக்கிகள் மூர்க்கர்கள் போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றை ஆழமாக படித்தவர்கள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் Thugs and Pindars என்ற மூர்க்க போக்கிரி கூட்டம் எந்த அளவுக்கு ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். Thugs and Pindaris என்பவர்கள் ஔரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையை பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும்.

- Advertisement -

அவர்கள் மத ரீதியாகவோ இனமொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாக இருந்தவர்கள். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ கோட்பாடோ ஒழுக்கமோ, பண்போ கிடையாது. வழிபோக்கர்களோடு வழிப்போக்கர்களாக பழகி அவர்களை அண்டி இருந்துவிட்டு ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை.

அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திர பிரதேசம் சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடந்த கொள்ளை சம்பவங்களை போல் கொள்ளையடித்தும் செல்வார்கள். ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோக்கியது. பின் அவர்கள் கடுமையான போருக்கு பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்ச சொச்சங்களாக சமூகத்தில் பரவியும் பதுங்கியும் கிடக்கின்றனர்.

- Advertisement -

அந்த மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது. இதன் வெளிப்பாடாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து கொலை செய்து நகை உடைமைகளை கொள்ளையடித்துச் செல்வது, கனிம கொள்ளைகளில் ஈடுபடுவது நில மோசடிகள் செய்வது கௌரவ சாதியக் கொலைகள் செய்வது அரசாங்க துறைகளை கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்யம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள்தான்.

இந்த போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறை உருவாக்கப்பட்டது. Thugs and Pindaris இந்திய சமூகத்தையே அச்சுறுத்திய இன்னும் அச்சுறுத்தி வருகிற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை கொண்டவர்கள். அதுபோன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. எனவே தனது படத்திற்கு தக்லைஃப் என்று பெயர் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என நான் நடிகர் கமலை வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்