- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடடே... கஜினி திரைப்படத்தில் முதலாவதாக நடிக்க இருந்தது இவரா... இப்படி ஒரு அருமையான வாய்ப்பை மிஸ்...

அடடே… கஜினி திரைப்படத்தில் முதலாவதாக நடிக்க இருந்தது இவரா… இப்படி ஒரு அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல பாலிவுட் சினிமாவிலும் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஏ ஆர் முருகதாஸ். அஜித்தின் தினா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், அந்தப் படத்தின் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

 

- Advertisement -

இதன் பிறகு விஜயகாந்த் உடன் இணைந்து ரமணா என்னும் திரைப்படத்தை கொடுத்தார். புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் எண்ணற்ற திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், அவருடைய ரமணா திரைப்படம் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் என்று கூறலாம். ஊழல் லஞ்சத்திற்கு எதிரான இந்த திரைப்படம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு போய் சேர்ந்தது.

 

- Advertisement -

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய படம் தான் கஜினி. பத்து நிமிடங்களில் அனைத்தையும் மறக்கும் ஒரு நபர், இருப்பினும் அந்தக் குறையில் இருந்து வெளி வருவதற்காக தனித்துவமாக அவர் செய்யும் செய்கைகள், எதிரியை பழிவாங்க போடும் திட்டம் என கஜினி திரைப்படத்தில் அத்தனையும் கச்சிதமாக இருக்கும்.

 

இந்த கதாபாத்திரத்திற்கு முற்றிலுமாக பொருந்தி போய் தூள் கிளப்பி இருப்பார் நடிகர் சூர்யா. சொல்லப்போனால் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த திரைப்படம் இதுதான் என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்த திரைப்படம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கும்.

 

மிக முக்கியமாக சூர்யா அசின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்றளவும் பிரபலம். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தி திரை உலகிற்க்கு சென்ற முருகதாஸ் அங்கேயும் கஜினி திரைப்படத்தை ரீமேக் செய்தார். இதில் கதாநாயகனாக அமீர்கான் நடிக்க அங்கேயும் படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இந்த நிலையில் கஜினி திரைப்படத்திலிருந்து புதிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

 

அதாவது இந்த திரைப்படத்தின் கதையை முதன்முறையாக நடிகர் மாதவனிடம் தான் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு இரண்டாம் பாதி நன்றாக இல்லை என மாதவன் கூறிவிட்டாராம். இதனால் அவரை விட்டு கதை நழுகி போக அதை சூர்யா கெட்டியாக பிடித்து இருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படி ஒரு அருமையான படத்தை எப்படி மாதவன் செய்தார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்