- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் அப்பா நடிச்ச படங்களையே நான் பார்க்க மாட்டேன், அதுக்கு அந்த சம்பவம்தான் காரணம் -...

என் அப்பா நடிச்ச படங்களையே நான் பார்க்க மாட்டேன், அதுக்கு அந்த சம்பவம்தான் காரணம் – நடிகர் சூர்யா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுபவர் மூத்த நடிகர் சிவக்குமார். இவர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தவர். உடல் ஆரோக்கியம் மனக்கட்டுப்பாடு என எந்தவிதமான தீய பழக்கங்களும் இல்லாத ஒரு ஒழுக்கசீலர் என்பதால் இவரை என்றும் மார்கண்டேயர் என்று ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா இளைய மகன் கார்த்தி இருவருமே இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நேருக்கு நேர் படம் மூலம் சூர்யாவும் பருத்தி வீரன் படம் மூலம் கார்த்தியும் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக அறிமுகமானார்கள். இப்போது சூர்யா தனது 47வது படத்திலும் கார்த்தி தனது 27வது படத்திலும் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

பெரும்பாலும் பல இளம் நடிகர்களின் நடிப்பில் லேசாக ரஜினி அல்லது கமல் நடிப்பின் சாயல் தெரியும். ஏனென்றால் அவர்களது படங்களை பார்த்து பார்த்து நடித்து நடிகர்களாக மாறியவர்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி அப்பட்டமாக தெரிவார். அதே போல் நடிகர் சிவக்குமாரும் ஒரு தொனியில் பேசி நடித்திருப்பது அவரது ஸ்டைலாக இருந்திருக்கிறது. ஆனால் அவரது சாயல் சூர்யா, கார்த்தி நடிப்பில் இதுவரை வெளிப்பட்டதில்லை.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, ஒரு தடவை என் பிரண்ட் வீட்டு கல்யாணத்துக்கு போனப்ப ஒரு விஷயம் நடந்துச்சு. அவரோட குடும்பம் ஒரு அமைச்சரோட சொந்தம். நான் அங்க போனப்போ நான் யாருன்னு அந்த அமைச்சர் கேட்டார். அப்போ நான் நடிகர் சிவகுமாரோட பையன்னு அறிமுகம் பண்ணினாங்க.

- Advertisement -

நான் அப்போதான் ஆக்டிங் பக்கம் வரத் தொடங்கி இருக்கேன். இதைக்கேட்ட அந்த அமைச்சர், நீயும் உன் அப்பா மாதிரி தானே செய்யப் போறே? நடிக்கப் போறே அப்படீன்னு கேட்டார். அந்த ஒரு வார்த்தை என்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. அதனால நான் என் அப்பாவோட படங்களை பார்ப்பதையே விட்டுட்டேன்.

அவரோட எந்த சம்பந்தமும் இல்லாம எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கணும்ன்னு நினைச்சதால தான் அப்படி செஞ்சேன். அதுதான் என் அப்பா நடித்த படங்களை நான் பார்க்காமல் தவிர்த்ததுக்கு காரணம் என்று அந்த நேர்காணலில் நடிகர் சூர்யா ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்