- Advertisement -
Homeபொழுதுபோக்குபடைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சம்மதித்த நடிகர் ராகவா லாரன்ஸ், பிறகு நடிக்காதது ஏன்?...

படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சம்மதித்த நடிகர் ராகவா லாரன்ஸ், பிறகு நடிக்காதது ஏன்? – டைரக்டர் சொல்ற இந்த உருட்டு நம்பற மாதிரி இல்லையே…?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன். மூத்த மகன் விஜய பிரபாகரன், அரசியலில் ஆர்வமாக இருந்து தேமுதிக கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சண்முக பாண்டியன் சினிமா நடிகராக வளர்ந்து வருகிறார். சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களை தொடர்ந்து அவர் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

நடிகர் விஜயகாந்த் மறைவின் போது, அவரது இல்லத்துக்கு தனது அம்மாவுடன் துக்கம் விசாரிக்க சென்றுவிட்டு திரும்பி நடிகர் ராகவா லாரன்ஸ், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நடிகர் விஜயகாந்த் மிகப்பெரிய பண்பாளர். மற்றவர்களுக்கு உதவுவதில், தர்மம் செய்வதில் அவர் மிகச் சிறந்தவர்.

- Advertisement -

அதனால் அவரது குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். குறிப்பாக அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பதால், அவரது படங்களில் கேமியோ ரோலில் நடிக்க எப்போது அழைத்தாலும் தயாராக இருக்கிறேன். இரட்டை ஹீரோ கதை என்றாலும், அவருடன் நடிக்க நான் தயார் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

அதன்பிறகு சண்முக பாண்டியன் நடித்து வந்த படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியனுடன் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிக்க முடிவானது. ஒரு சண்டைக்காட்சியில் இருவரும் இணைந்து எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது போன்று காட்சி என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி வரை அந்த சண்டை காட்சியில் நடிக்க ராகவா லாரன்ஸ் செல்லவில்லை. அதனால் அவர் நடிக்காமலேயே படைத்தலைவன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

இதனால் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல், ராகவா லாரன்ஸ் ஏமாற்றி விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இதுகுறித்து படைத்தலைவன் படத்தின் இயக்குனர் அன்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்த படத்தில் நடிப்பது குறித்து நானும், சண்முக பாண்டியனும் ராகவா லாரன்ஸை நேரில் சந்தித்து பேசினோம். கதையை கேட்ட போது அவர் சந்தோஷமாக நடிக்க ஒத்துக்கொண்டார். ஆனால் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது, அவரது கேரக்டர் கனமாக இருக்குமா என்று எனக்கு சந்தேகம் வந்தது.

எனக்கு ஏற்பட்ட இந்த தயக்கம் குறித்து, மீண்டும் அவரை நான் தனியாக நேரில் சந்தித்து இதுபற்றி பேசினேன். என்னுடைய முடிவுக்கு அவரும் சம்மதம் சொன்னார். மேலும் படைத்தலைவன் படம் பிரமோசனுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக அவர் கூறினார். ஆனால் இது தெரியாமல் அவர் படைத்தலைவன் படத்தில் நடிக்காமல் போனதற்கு உண்மைக்கு புறம்பான காரணங்கள் தவறாக கூறப்படுகின்றன. அதற்கு விளக்கம் தரவே இந்த அறிக்கை என்று அவர் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்