- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் கமல் ரெண்டு பேர் கூப்பிட்டும் நாயகன் படத்தில் நடிக்க மறுத்த ரகுவரன் - காரணம்...

மணிரத்னம் கமல் ரெண்டு பேர் கூப்பிட்டும் நாயகன் படத்தில் நடிக்க மறுத்த ரகுவரன் – காரணம் என்ன தெரியுமா?

- Advertisement -

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக நாயகனாக உயர்ந்த நடிகர் கமலஹாசனின் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்ட படம் நாயகன். மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்த நாயகன் திரைப்படமானது தியேட்டரில் மட்டும் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை கண்டது. அதோடு வசூல் ரீதியாகவும் அந்தப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

Nayagan

இந்த நாயகன் படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தார். இந்த படத்தில் மணிரத்தினம் நாசர் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் முதலில் ரகுவரனை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று அவரிடமும் சென்று என்னுடைய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அப்போது ரகுவரனும் நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் அதன் பிறகு மணிரத்னம் போலீஸ் கதாபாத்திரத்தை வழங்கியதால் அந்த வாய்ப்பு வேண்டாம் என்று கூறி ரகுவரன் மறுத்துள்ளார்.

Raghuvaran

பின்னர் நேரடியாக கமலும் சென்று ரகுவரனை அழைத்த பின்னரும் அந்த கதாபாத்திரத்தை ரகுவரன் ஏற்கவில்லை என்று மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் யாதெனில் : போலீஸ் கதாபாத்திரம் என்பதனால் தன்னுடைய ஹேர் ஸ்டைலை திருத்த வேண்டும் என்று மணிரத்தினம் கூறி இருக்கிறார். அதன் காரணமாகவே அந்த வாய்ப்பை ரகுவரன் மறுத்திருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் எப்பொழுதுமே தன்னுடைய ஹேர் ஸ்டைலை நான் மாற்ற விரும்பாத ரகுவரன் அதனாலே அந்த வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்று கூறி மறுத்துள்ளார். மணிரத்தினம் மற்றும் கமல் ஆகிய இருவர் கேட்டும் அந்த வாய்ப்பை நிராகரித்த ரகுவரனுக்கு அதன் பிறகு இறுதிவரை கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்