- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபாஸூடன் ஒப்பிட்டு பிரபல பாலிவுட் நடிகரை விமர்சித்த இயக்குனர் ராஜமவுலி - ஆனா இப்போ...

நடிகர் பிரபாஸூடன் ஒப்பிட்டு பிரபல பாலிவுட் நடிகரை விமர்சித்த இயக்குனர் ராஜமவுலி – ஆனா இப்போ ஏன் இப்படி ஜகா வாங்கி பேசறாருன்னு தெரியலையே?

- Advertisement -

பாகுபலி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். அந்த படத்தை இயக்கிய ராஜமௌலியை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம். கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக பாகுபலி 2 பாகங்களாக வெளிவந்தது. 2 பாகங்களிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, வசூலில் சாதனை படைத்தது.

அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக பிரபாஸ் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் ராஜா காலத்து படங்களை தர இயக்குனர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகுபலி வெற்றியை பார்த்துதான் இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் பில்லா. அப்போது நடந்த பில்லா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமவுலி, 2006ம் ஆண்டில் தூம் 2 படம் வெளியான போது ஹிருத்திக் ரோஷன் போன்ற ஹீரோக்கள் தென்னிந்தியாவில் ஏன் இல்லை என்று யோசித்ததாக கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் அதுகுறித்து ராஜமெளலி பேசுகையில், 2006ம் ஆண்டில் தூம் 2 படத்தைப் பார்த்துவிட்டு ஹிருத்திக் ரோஷன் போன்ற ஹீரோக்கள் தென்னிந்திய சினிமாவில் ஏன் இல்லை என்று நான் வியந்தேன். ஆனால் பிரபாஸ் நடித்த பில்லா டிரெய்லரை பார்த்த பிறகு இப்போது நான் ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

- Advertisement -

நடிகர் பிரபாஸுடன் ஒப்பிடும்போது ஹிருத்திக் ரோஷன் எல்லாம் ஒன்றுமே இல்லை. பாலிவுட்டை விட தெலுங்கு சினிமா மிகவும் சிறப்பாக உள்ளது. இப்போது நாங்கள் ஹாலிவுட் படங்களுக்கு சமமாக இருக்கிறோம் என்று பேசி இருக்கிறார். இந்த பேச்சு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் அவ்வாறு தான் பேசியதற்கு ராஜமௌலி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து ராஜமௌலி கூறுகையில், இது நான் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசியது. சுமார் 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். என் நோக்கம் அவரை ஒருபோதும் தாழ்த்துவது கிடையாது. அவரை நான் மிகவும் மதிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்போது பாலிவுட்டிலும் தனது படங்கள் ஓடிக்கொண்டிருப்பதால், இப்போது ஹிருத்திக் ரோஷன் குறித்த விமர்சனத்தை வாபஸ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்