- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நபர் 2 மணி நேரத்தை வீணடித்து விட்டார்… முன்பே மருத்துவமனைக்கு சென்றிருந்தால் அண்ணன் பிழைத்திருப்பார்...

அந்த நபர் 2 மணி நேரத்தை வீணடித்து விட்டார்… முன்பே மருத்துவமனைக்கு சென்றிருந்தால் அண்ணன் பிழைத்திருப்பார் – மறைந்த நடிகர் ராஜேஷின் தம்பி சத்யன் பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜேஷ். இதுவரை 150க்கும் மேற்பட்டங்களில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். ஆசிரியராக ஆரம்பத்தில் இருந்த ராஜேஷ், அவள் ஒரு தொடர்கதை படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நடிகராக வந்தவர்.

கன்னிப்பருவத்திலே படம் அவருக்கு பெரிய வரவேற்பை அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது. பிறகு கே பாக்யராஜ் இயக்கத்தில் அவர் டாக்டர் கேரக்டரில் நடித்த அந்த 7 நாட்கள் படமும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபமாக ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் சார்ந்த விஷயங்களை யூடியூப் சேனல்களில் நடிகர் ராஜேஷ் பேசி வந்தார். அது சார்ந்த முக்கிய வல்லுனர்களை சந்தித்து அவர்களிடம் பலவிதமான கேள்விகளை கேட்டு மக்கள் மத்தியில் ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் சார்ந்த பல விழிப்புணர்வு சிந்தனைகளையும் கொண்டு வந்தார். தீவிர வாசிப்பாளராக ராஜேஷ் எப்போதும் புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பவர்.

சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராஜேஷின் தம்பி நடிகர் சத்யன் ஒரு பகீர் தகவலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

நடிகர் சத்யன் கூறியதாவது, இன்று காலையில் அண்ணனை பார்க்க வந்த போது, இரவு முழுவதும் தூங்கவில்லை, மூச்சு விட முடியவில்லை என்றார். நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே இல்லை. அப்போது சித்தா டாக்டர் என்று வந்த ஒருவர், காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை அண்ணனுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவர் கதை பேசியே 2 மணி நேரத்தை வீணடித்து விட்டார்.

முதலிலேயே ஆம்புலன்ஸ் வரவழைத்து அண்ணனை நாங்கள் பெரிய மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் நிச்சயம் அவர் பிழைத்திருப்பார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்ததால் அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனைகளை செய்துவிட்டு வருவார். சித்தா டாக்டராக வந்தவரை நாங்கள் பேச விடாமல் அப்போதே திருப்பி அனுப்பி இருந்தால் அண்ணன் பிழைத்திருப்பார். இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று நடிகர் சத்யன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்