- Advertisement -
Homeபொழுதுபோக்குதனக்கு ஒருவரை பிடித்து விட்டால் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத்குமார் என்ன பரிசளிப்பார்கள் தெரியுமா? - இயக்குனர்...

தனக்கு ஒருவரை பிடித்து விட்டால் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத்குமார் என்ன பரிசளிப்பார்கள் தெரியுமா? – இயக்குனர் சொன்ன லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தனக்கு பிடித்தவர்களை பிரியமானவர்களை சந்திக்கும் போது பரிசு வழங்குவது பலருக்குமே பிடித்தமான விஷயம்தான். பொதுவாக விலை உயர்ந்த சாக்லேட்டுகள், ஆடைகள், வாட்ச், காஸ்ட்லி பேனா மற்றும் தங்க மோதிரம் தங்க செயின் போன்றவர்களை பலரும் பரசளிக்கின்றனர். மிகவும் வசதி படைத்தவர்கள் கார் பைக் சொந்த வீடு என்று கூட வாங்கி பரிசாக தருவது உண்டு.

நடிகர்களில் பலரும் இதுபோல் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசு தருவதில் அலாதி ஆர்வம் கொண்டவர்கள். டிராகன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின், தினமும் எனக்கு ஏதேனும் ஒரு பரிசை தந்து அசத்தி விடுவார் என சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியிருந்தார்.

- Advertisement -

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தனக்கு பிடித்தமானவர்களை சந்திக்கும் நேரத்தில் கைவசம் எதுவும் பரிசுப்பொருள் இல்லை என்றால் உடனே தன் கையில் கட்டியிருக்கும் வாட்சை கழட்டி பரிசாக தந்து விடுவாராம். அதுபோல் நடிகர் ரஜினிகாந்த் அஜீத்குமார் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு தரும் பரிசுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி ஆன்மிக தலங்களுக்கு செல்பவர். இமயமலை ரிஷிகேஷ் உள்ளிட்ட பல இடங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்பவர். அப்போது அவர் ஆன்மிக தலங்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு உள்ள பிரசித்தி பெற்ற ருத்ராட்ச மாலைகளை ருத்ராட்ச மணிகளை வாங்கி வருவது ரஜினியின் வழக்கம். அதனால் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு ருத்ராட்ச மாலைகளை, பாபா புகைப்படங்களை பரிசாக தருவதுதான் வழக்கம்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறுகையில், அஜீத்குமாருக்கு யாரையாவது பிடித்து விட்டால் அவர்களுக்கு காஸ்ட்லியான பொருளை தான் பரிசாக தருவார். வாலி படத்தின் கதையை சொன்ன போது எனக்கு ஒரு பைக்கை பரிசாக கொடுத்தார். அதன்பிறகு வாலி படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்துவிட்டு எனக்கு கார் வாங்கி கொடுத்தார், என்று கூறியிருக்கிறார்.

விக்ரம் படம் பெரிய சக்ஸஸ் கொடுத்த போது இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கார் மற்றும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை கமல் பரிசாக வழங்கினார். அதே போல் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ரஜினி நெல்சன் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் விலை உயர்ந்த கார்களை பரிசளித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்