- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலத்தால் அழியாத பாடல்களை தந்த கானக்குயில், பாடகி எஸ் ஜானகி மறைவுக்கு நடிகர்கள் ரஜினி...

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கானக்குயில், பாடகி எஸ் ஜானகி மறைவுக்கு நடிகர்கள் ரஜினி கமல் முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!

- Advertisement -

காலத்தால் அழியாத பாடல்களை தனது இனிமையான குரலால் தந்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி எஸ் ஜானகி. அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிம்பு மற்றும் தமிழக முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்திய திரை இசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ் ஜானகியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசையுலகில் அழியாத முத்திரையை பதித்தவர்.

- Advertisement -

பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளை பெற்றவர். தனது இனிமையான குரல் உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இசைக்குயில் எஸ் ஜானகியின் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய கானகோகிலம் ஜானகியின் இசைப்பயணம் மிக நீண்டது.

- Advertisement -

அவரது மறைவு என்பது வானொலி தொடங்கி ஸ்பாட்டிபை வரையில் அவரது அமுத கானங்களை தங்களது இல்லங்களில் ஒலிக்க விட்டு ரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும் இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களை பாடிய அவர் என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக் கொண்டே இருப்பார் என்று முக ஸ்டாலின் அந்த பதிவில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், தனது தேனமுது குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும். அவருக்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள் என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்