- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கேட்டேன்.. அவரு குடுத்தாரு.. சூப்பர் ஸ்டார் வழங்கிய அன்புப்பரிசு - ஜாபர் சாதிக் வெளியிட்ட...

நான் கேட்டேன்.. அவரு குடுத்தாரு.. சூப்பர் ஸ்டார் வழங்கிய அன்புப்பரிசு – ஜாபர் சாதிக் வெளியிட்ட சுவாரசிய தகவல்

- Advertisement -

ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “தர்பார்”, “அண்ணாத்த” படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் தற்போது அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான ஜெயிலர் திரைப்படமானது தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை எட்டி வருகிறது. மேலும் வரவிருக்கும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்பதனால் தயாரிப்பு நிறுவனமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள இந்து ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதன் காரணமாக இந்த படம் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறிய கதாபாத்திரம் கூட மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தில் நடித்த அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாபர் சாதிக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜாபர் சாதிக் அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் சிம்புவுக்கு எதிராக சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதேபோன்று ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ஜவான் படத்திலும் நடித்திருக்கும் ஜாபர் சாதிக் தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஜெயிலர் படத்தில் கூட அவர் வரும் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு வழங்கிய பரிசு குறித்து ஒரு சுவாரசிய தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி அவர் பயன்படுத்திய கூலிங் கிளாஸ்ஸை ஜாபர் சாதிக் கேட்டுள்ளார். உடனே ரஜினியும் மறுக்காமல் அதனை வழங்கியுள்ளார். அந்த கூலிங் கிளாஸ் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜாபர் சாதிக் “நான் கேட்டேன்.. “அவர் கொடுத்தார்” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்