- Advertisement -
Homeபொழுதுபோக்குஏழு மலை ஏழு கடல் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகை அஞ்சலி -...

ஏழு மலை ஏழு கடல் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகை அஞ்சலி – அந்த வார்த்தை தான் பொருத்தம் என்று கூறிவிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் சில முக்கிய படங்களை தந்தவர் ராம். கடந்த 2007ம் ஆண்டில் கற்றது தமிழ் படம் மூலம் இயக்குனராக வந்தவர். இந்த படத்தில் ஜீவா அஞ்சலி நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தங்க மீன்கள் தரமணி பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் தங்க மீன்கள் படத்தில் ராம் நாயகனாக நடித்திருந்தார்.

அது மட்டுமின்றி சவரக்கத்தி என்ற படத்திலும் ராம் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சலூன் கடைக்காரராக நடித்திருப்பார். அவரது பிள்ளைத்தாச்சி மனைவியாக பூர்ணா நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக மிஷ்கின் நடித்திருப்பார். முழுநீள காமெடி படமான இதில் ராம் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இப்போது ஏழுமலை ஏழு கடல் என்ற படத்தை ராம் டைரக்ட் செய்திருக்கிறார். விரைவில் இந்த படத்தின் டிரெய்லர் வௌியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கற்றது தமிழ் தரமணி படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகை அஞ்சலி நடித்திருக்கிறார்.

அங்காடி தெரு எங்கேயும் எப்போதும் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கேம் சேஞ்சர் மதகஜ ராஜா படங்களில் நடித்துள்ள அஞ்சலி இப்போது ஏழுமலை ஏழு கடல் படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். இதற்கிடையே தெலுங்கில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் கோதாவரி வெப் சீரிஸூக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படத்திலும் அஞ்சலி இரட்டை நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இதில் கேம் சேஞ்சர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் மதகஜ ராஜா சக்கைப் போடு போட்டு வருகிறது.

இப்போது நடிகை அஞ்சலி ஏழுமலை ஏழுகடல் படம் குறித்து ஒரு நேர்காணலில் கூறியதாவது, இந்த படம் பார்க்கும்போதே உங்களுக்கு அது மிகவும் அழகாக இருக்கும். இந்த படத்தை பற்றிக் கூற அழகு என்ற வார்த்தை தான் சரியானதாக இருக்கும். கற்றது தமிழ் படம் எனக்கு எப்படி மிக முக்கியமான படமோ அதுபோல் இந்த படமும் இருக்கும். இதற்காக நான் ராம் நிவின்பாலி என அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்