தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர் மணிரத்னம். அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றியடைந்துள்ளன. கடந்த 34 ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த தளபதி படம் பெரிய ஹிட் படமாக இருந்தது.
ஆனால் அந்த படத்துக்கு பிறகு மீண்டும் இருவரும் இணையவில்லை. ஆனால் நாயகன் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்னமும், கமலும் இணைந்து உருவான படம் தக்லைப், வருகிற 2025ம் ஆண்டில் ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் கமலுடன் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து திரிஷா இந்த படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
பொன்னியில் செல்வன் முதல் பாகம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் இருவருமே பங்கேற்று அந்த படம் குறித்து சிலாகித்து பேசினர். இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நானும், ரஜினியும் நடிக்க ஆசைப்பட்டோம். எம்ஜிஆரே பொன்னியின் செல்வன் படத்தை திரைப்படமாக்க அதிக ஆசைப்பட்டார். மிகவும் பெருமைக்குரிய கல்கியின் படைப்பு இது என்றும் புகழ்ந்தனர்.
அதன்பிறகு கமல் நடித்த தக்லைப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். இதற்கிடையே சில வாரங்களுக்கு முன், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்கிறார். நாயகன் படத்துக்கு பின் பல ஆண்டுகள் கழித்து தக்லைப் படத்தில் கமல், மணிரத்னம் இணைந்தது போல், தளபதி படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம், ரஜினிகாந்த இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால் அதை இயக்குனர் மணிரத்னம் மனைவி, நடிகை சுஹாசினி கட்டாயமாக மறுத்தார். அவர்கள் இருவரும் மீண்டும் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்கவில்லை என்றும் உறுதியாக கூறினார். ஆனால் இப்போது மீண்டும் அந்த தகவல் வைரலாகி வருகிறது.
வருகிற 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் வருகிறது. அன்று ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் போஸ்டர், அடுத்து நடிக்க உள்ள ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு பிரமோ வீடியோ லேட்டஸ்ட் அப்டேட் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் மணிரத்னம், ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட்டும் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது உண்மையா, உருட்டா எனத் தெரியவில்லை. எனினும் ரசிகர்கள் ஆவலாக ரஜினி, மணிரத்னம் கூட்டணியில் ஒரு படம் உருவாக காத்திருக்கின்றனர்.





