தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் உலகநாயகன் கமல்ஹாசன். 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற படம் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் இன்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு சகலகலா வல்லவனாக இருக்கிறார். இன்று அவர் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைப் படத்தின் டீசர் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியானது. அதில் தக்லைப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.
1988ம் ஆண்டில் வெளியான நாயகன் படத்துக்கு பிறகு, 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக்லைப். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் திரிஷா, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் தக்லைப் படத்தில் நடித்துள்ளனர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரெட் ஜெயின்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தக்லைப் படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது மும்பையில் சிம்பு, திரிஷா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் இந்த பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட உள்ளது.
தக்லைப் படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை இயக்குனர் மணிரத்னம் துரிதப்படுத்திய நிலையில், அது சார்ந்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி பெற 45 நாட்கள் அமெரிக்காவில் தங்கி இந்த பயிற்சியை பெறுகிறார். இம்மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலேயோ கமல் சென்னைக்கு திரும்ப இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று நவம்பர் 7ம் தேதி அவரது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, கமல் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தக்லைப் படத்தின் 45 நொடிகள் கொண்ட தக்லைப் டீசர் வெளியாகி உள்ளது. அதில் வருகிற 2025ம் ஆண்டில் ஜூன் 5ம் தேதி தக்லைப் படம் ரிலீஸாகிறது என்ற அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசரை காண இங்கே கிளிக் செய்யவும்;https://www.youtube.com/watch?v=ZS2Y25OOCok





