ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான “Hukum” கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் இடம்பெற்ற “பேரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு” என்ற வரிகள் மறைமுகமாக விஜய்யை தாக்குவது போல் எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

விஜய்யை அவரது ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் என்றே அழைத்து வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் கடுப்பில் உள்ளனர். விஜய் இது குறித்து எதுவும் மறுப்பு தெரிவிக்காததால் இது மிகப்பெரிய பரபரப்பான டாப்பிக்காக வலம் வருகிறது.
இந்த சமயத்தில் ஒரு முக்கியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளதாக ஓரளவு உறுதியான தகவல்களே வெளிவருகின்றன. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் அஜித்தையும் நடிக்க வைக்க ரஜினி பிளான் போடுகிறாராம்.

அதாவது “தலைவர் 171” திரைப்படத்தில் ரஜினி, அஜித் ஆகியோர் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே “ஜெயிலர்” பாடலில் விஜய்யை தாக்கி வரிகள் எழுதப்பட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் போட்டியாளரான அஜித்தை தன்னுடன் நடிக்க வைக்க ரஜினி பிளான் போடுவது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “லால் சலாம்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.





