- Advertisement -
Homeபொழுதுபோக்குராகவா லாரன்ஸ் தவிர வேற யாராவது அப்படி கேட்டிருந்தா நடக்கிறதே வேற- பிரபல பத்திரிக்கையாளர் பகிர்ந்த...

ராகவா லாரன்ஸ் தவிர வேற யாராவது அப்படி கேட்டிருந்தா நடக்கிறதே வேற- பிரபல பத்திரிக்கையாளர் பகிர்ந்த சீக்ரெட்

- Advertisement -

தொடக்கத்தில் டான்ஸ் மாஸ்டராக இருந்து பின்பு ஹீரோவாக முன்னேறியவர் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு காலகட்டத்தில் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயனிடம் எடுபிடியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் ஒரு ரஜினிகாந்த் படத்திற்காக சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

அப்போது அந்த படப்பிடிப்புத் தளத்திற்கு ராகவா லாரன்ஸையும் அவர் அழைத்துக்கொண்டு போனார். அங்கே சூப்பர் சுப்பராயன் ரஜினிகாந்திடம் ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்தினார். “இவன் நல்ல டான்ஸ் ஆடுவான்” என்று ரஜினியிடம் கூற, ரஜினிக்கு முன் டான்ஸ் ஆடி காட்டினார் ராகவா லாரன்ஸ்.

- Advertisement -

ராகவா லாரன்ஸிற்கு அந்த சமயத்தில் மூளையில் கட்டி இருந்தது. இதனை ரஜினியிடம் கூறியபோது, “உனக்கு எதாவது பண உதவி வேண்டுமா?” என்று ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். அதற்கு ராகவா லாரன்ஸ், “என்னை டான்ஸ் யூனியனில் மெம்பராக சேர்த்துவிடுங்கள்” என கேட்டுக்கொண்டாராம். உடனே ரஜினிகாந்த் சிபாரிசு செய்ய, ராகவா லாரன்ஸ் டான்ஸ் யூனியனில் சேர்ந்துவிட்டார்.

இவ்வாறுதான் ரஜினிகாந்த் மீது தீவிர அன்பு கொண்டவராக மாறினார் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ரஜினிகாந்த் “சந்திரமுகி 2” திரைப்படத்திற்கு சம்மதம் தெரிவித்தது குறித்த ஒரு ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

“பாட்ஷா படத்திற்கே இரண்டாம் பாகம் வேண்டாம் என்று கூறியவர்தான் ரஜினிகாந்த். ரஜினிகாந்திற்கு மிகவும் நம்பிக்கையான ஆளாக இருப்பவர் ராகவா லாரன்ஸ். வேறு யார் கேட்டிருந்தாலும் சந்திரமுகி 2 திரைப்படத்தை எடுக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கமாட்டார். ராகவா லாரன்ஸ் கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார்” என்று கூறியிருக்கிறார்.

“சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருடன் வடிவேலு, ராதிகா சரத்குமார், கங்கனா ரனாவத் உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்