- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரஜினி பதிலால் ஆடிப்போன ரசிகர்கள் - தலைவரே…...

இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரஜினி பதிலால் ஆடிப்போன ரசிகர்கள் – தலைவரே… லால் சலாமை நினைச்சு சொல்லிட்டீங்களா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் இந்தியன் 2. இந்த படம், 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தியன் படம் போலவே மிகப்பெரிய அளவில், வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால் அதை இந்தியன் 2 தவிடு பொடியாக்கி விட்டது.

ஏனென்றால் இந்தியன் படத்துக்கும், இந்தியன் 2 படத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது என்று சொல்கிற அளவுக்கு அந்த படங்களுக்கு இடையே அவ்வளவு மோசமான வித்யாசங்கள் இருந்தன. அந்த படத்தில் கமல், ஷங்கர் கூட்டணி ஜமாய்த்து இருந்தது. ரசிகர்களை கதிகலங்க வைத்திருந்தது. கமல், இந்தியன் தாத்தாவாக வாழ்ந்து காட்டியிருந்தார்.

ஆனால் இந்த படம், இது ஷங்கர் இயக்கிய படம்தானா என்ற கேள்வியை ரசிகர்களை கேட்க வைத்தது. இதில் ரசிகர்களை கமல்ஹாசன் கதற வைத்திருந்தார். தியேட்டரை விட்டு வெளியேறி தெறித்து ஓடும் அளவுக்கு மிக மோசமான ஒரு படமாக இது இருந்ததாக, ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர்.

இதுவரை ஷங்கர் இயக்கிய படங்களில், இந்தியன் 2 போன்ற மிக மோசமான படம் எதுவுமே கிடையாது. இந்த படத்தை ஷங்கர் ஒருமுறையாவது பார்த்துவிட்டு தான் ரிலீஸ் செய்தாரா, இப்படி ஒரு சொதப்பலான திரைக்கதையை எப்படி படமாக்கினார், என்றெல்லாம் பலரும் கலாய்த்து விமர்சித்தனர். எனினும் இந்த படம் உலகம் முழுவதும் 146 கோடி ரூபாய், தமிழகத்தில் மட்டும் ரூ. 50 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த கமலின் ஆதரவாளர்கள் சிலர் இந்தியன் 2 படத்தை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து, அதிலும் அசிங்கப்பட்டனர். குறிப்பாக ரோபோ சங்கர், ஆழ்வார் பேட்டை ஆண்டவர், ஆஸ்கர் அவார்டை அடித்து நொறுக்கி விட்டார். இனி தமிழ் சினிமா அல்ல, கமல் சினிமா என்றெல்லாம் ஓவராக புகழ்ந்து பேசி, விமர்சனத்தில் சிக்கிக்கொண்டார்.

இப்போது கேரளாவில் நடந்த விழாவில் கலந்துக்கொண்டு அங்கிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், கூலி படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான கமல் நடித்த இந்தியன் 2 படம் பார்த்தேன். படம் நன்றாக உள்ளது. வேட்டையன் டப்பிங் போய்க்கொண்டு இருக்கிறது. ரிலீஸ் தேதி முடிவாகவில்லை, என்று கூறினார். இந்தியன் 2 படத்தை நன்றாக இருப்பதாக ரஜினி கூறியதை, ஆமாம் தலைவரே, லால் சலாமை விட நல்லா இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்