ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. எனினும் வெளிநாடுகளில் ஏற்கனவே இத்திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் அமெரிக்காவில் மட்டும் டிக்கெட் வசூல் ஒரு கோடியை தாண்டியுள்ளதாம். இவ்வாறு படம் வெளியாவதற்கு முன்பே சாதனை படைத்துள்ளது “ஜெயிலர்”.

“ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இதற்கு முன்பு விஜய்யை வைத்து இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் ரசிகர்களை கவரவில்லை. “பீஸ்ட்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் “ஜெயிலர்” படத்தில் கமிட் ஆகிவிட்டார்.
“பீஸ்ட்” திரைப்படத்தின் ரிசல்ட்டை பார்த்த ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பலரும் ரஜினியிடம், “ஜெயிலர்” படத்தில் நடிக்காதீர்கள் என்று கூறினார்களாம். எனினும் நெல்சனின் மேல் உள்ள நம்பிக்கையில் இத்திரைப்படத்தில் நடித்தாராம் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் இதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படமும் சரியாக போகவில்லை. ஆதலால் நெல்சனை போலவே ரஜினிகாந்திற்கும் “ஜெயிலர்” திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த், நெல்சனுக்கு ஒரு முக்கியமான கண்டிஷனை போட்டு உள்ளாராம்.
அதாவது படம் வெளிவரும் வரை நெல்சன் இத்திரைப்படத்தை குறித்து எங்கேயும் வாயை திறக்கக்கூடாது என்று கூறியுள்ளாராம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட எதுவும் தேவையில்லாமல் பேசிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும்படி ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.
இதற்கு என்ன காரணம் என்றால், “பீஸ்ட்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு நெல்சன் மிகவும் அதிகமாகவே பேசினார். அந்த படம் சரியாக போகவில்லை. ஆதலால் “ஜெயிலர்” வெளிவரும் வரை கொஞ்சம் பேசாமல் இருங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். ஒரு வேளை இதனால்தான் “ஜெயிலர்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கு கூட புரோமோ ரெடி பண்ணவில்லை போல என்று ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.





