தவெக கட்சி தலைவர் விஜய் கடந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற 10 எம்எல்ஏக்களின் ஆட்சி நடத்தி வருகிறார். அதில் விசிக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தந்த ஆட்சியை தக்க வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் அதாவது 100 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இந்த 3 மாதங்களில் தவெக அரசு சந்தித்த விமர்சனங்களும் சர்ச்சைகளுமே மிக அதிகம். நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது கொலை கொள்ளை பாலியல் வன்முறைகள் பெருகி விட்டன. போதை பொருட்களின் புழக்கமும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே தவெக தேர்தல் வாக்குறுதிகளாக தந்த விஷயங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்து வருகின்றனர். திமுக அரசு போல் கொடுத்த வாக்குறுதியில் எந்த திருத்தமும் நிபந்தனையும் விதித்து ஏமாற்ற மாட்டோம், வாயில் வடை சுட மாட்டோம் என்று கூறியே அந்த வாக்குறுதிகளை சொன்ன விஜய், இப்போது நிபந்தனை கட்டுப்பாடுகள் மூலம் கொடுத்த வாக்குறுதிகளில் ஏமாற்றி வருவதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
குறிப்பாக தமிழக சட்டசபையில் எதிர்கட்சிகளான அதிமுக திமுக கூறும் குற்றச்சாட்டுகளை விட தவெக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் பேசுவதை தான் அதிகமாக சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சொல்கிறார். குறிப்பாக ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் புஸ்லி ஆனந்த் ரமேஷ் மரியவில்சன் போன்ற அமைச்சர்களின் அடாவடியான பேச்சு மக்களை எரிச்சலடைய வைக்கிறது.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், தமிழகத்தில் தவெக தலைமையில் முதல்வர் விஜயின் 100 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்வியே காதில் விழாதது போல எந்த பதிலும் சொல்லாமல் ரஜினிகாந்த் வேகமாக நடந்து சென்று விட்டார்.
அதற்கு முன்பு கேட்ட கேள்விக்கு ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டது, தர்மன் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று சொன்ன ரஜினிகாந்த், விஜய் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தது மூலம், அந்த ஆட்சியின் அவலங்களை சொல்லவும் வேண்டுமா, அதுதான் மக்களே சொல்கிறார்களே என்று கூறுவது போல் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





