நடிகர் விஷால் செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குனர் தருண் கோபி இயக்கிய திமிரு படத்திலும் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த 2 படங்களிலும் நடிகை ரீமா சென் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து சண்டக்கோழி சிவப்பதிகாரம் தாமிரபரணி நான் சிவப்பு மனிதன் குறிப்பாக துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து நடிகர் விஷால் முன்னணி ஹீரோவாக மாறினார். தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் பொறுப்புகளுக்கு வந்தார். இப்போதும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக விஷால் இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சூர்யாவை போலவே திரை பயணத்தில் கடுமையான தோல்விகளை சந்தித்து வருபவர் நடிகர் விஷால். அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் படுமோசமாக தோல்வியடைந்தன. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான படம் பெரிய வெற்றியை பெற்றது.
இதற்கு காரணம் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான். இந்த படத்தில் மட்டும் எஸ்ஜே சூர்யா நடிக்கவில்லை என்றால், விஷாலின் தோல்வி படங்களில் வரிசையில் மார்க் ஆண்டனி படமும் வந்திருக்கும். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜீத் நடித்த குட்பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு இருந்திருக்காது.
இந்நிலையில், வருகிற 12ம் தேதி, விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி நடித்த மதகஜ ராஜா படம் ரிலீஸாகிறது. அதுகுறித்த பிரமோசன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு மிகவும் பலவீனமான தோற்றத்தில் நடிகர் விஷால் கலந்துக்கொண்டார். மைக்கில் பேசும் போது கை நடுங்கியது. அவரது உருவமே வேறு மாதிரியாக மாறியிருந்தது. அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்றும் சொல்லப்பட்டது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் வலைப்பேச்சு அந்தணன், ஜெ பிஸ்மி கூறியதாவது, விஷாலுக்கு மலேரியா காய்ச்சல் என்றால் இந்த விழாவுக்கே வந்திருக்க மாட்டார். எல்லோரும் அவரை கட்டிப்பிடித்து நலம் விசாரித்திருக்க மாட்டார்கள். நீண்ட நாட்களாகவே அவருக்கு உடல் பாதிப்பு உள்ளது. இப்போது அது முற்றிபோயுள்ளது. விரைவில் அவர் தனது உடல் நலத்தை மீட்டெடுக்க வேண்டும். தனது இமேஜை கெடுத்துக்கொள்ளும் விதமாக, இந்த விழாவில் விஷால் கலந்து கொண்டுள்ளார். அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருக்கும், என்று கூறியிருக்கின்றனர்.





