நடிகர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா, நேற்று முன்தினம் மறைந்தார். 48 வயதான நிலையில் அவரது மறைவு தமிழ் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோஜூக்கு நந்தனா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நிலையில் ஓய்வில் இருந்த மனோஜ் திடீரென மாரடைப்பால் காலமானார்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் அவர் வசித்து வந்த சேத்துப்பட்டி வீட்டிலும் பிறகு நீலாங்கரையில் உள்ள அவரது தந்தை பாரதிராஜாவின் வீட்டிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பட நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் அரசியல் தலைவர்கள் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவுக்கு ஆறுதலும் கூறினர்.
வழக்கமாக இதுபோன்ற துக்க நிகழ்வுகளில் அஜீத்குமார் பங்கேற்பது இல்லை. அதுமட்டுமின்றி அவர் இப்போது இத்தாலியில் கார் ரேஸில் இருந்து வருகிறார். விஜய் சூர்யா சரத்குமார் பார்த்திபன் தம்பி ராமையா கேஎஸ் ரவிக்குமார் கவிஞர் வைரமுத்து என ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்களும் நேரில் வந்தனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நேரிலும் வரவில்லை. தனது வலைதள பதிவிலும் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கவில்லை. அதே போல் நடிகர்கள் தனுஷ் விஷால் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்றவர்களும் மனோஜ் மறைவை கண்டுகொள்ளவில்லை. ஆனால் 85 வயதான நிலையில் நடிகர் கவுண்டமணி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம்தான் பரட்டை கேரக்டரில் ரஜினியை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. பிறகு கொடி பறக்குது என்ற படத்திலும் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது நேரில் வராத ரஜினி வலைதள பக்கத்தில் கூட பாரதிராஜா மகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இசையமைப்பாளர் இளையராஜா நடிகை மீனா போன்றவர்கள் வலைதள பக்கத்தில் உடனே இரங்கல் தெரிவித்தனர். இளையராஜா வீடியோவும் வெளியிட்டு பேசியிருந்தார். சிம்புவும் வலைதள பக்கத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் தனுஷ் விஜய் சேதுபதி போன்றவர்கள் இந்த சோக நிகழ்வு குறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியது இப்போது சர்ச்சயைை கிளப்பியுள்ளது.





