நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக புகழப்படுகிறார். கமல்ஹாசன் உலகநாயகன் என அழைக்கப்படுகிறார். சம காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற இருவருமே கோடி கோடியாக இப்போதும் சம்பாதிக்கின்றனர். கமல் சம்பளம் ரூ. 150 கோடி, ரஜினி சம்பளம் ரூ. 120 கோடியாக இருந்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசனை பொறுத்த வரை நடன இயக்குநராக உள்ளே வந்தவர். அதன்பின் நடிகராக அவரை கே பாலசந்தர் திரையில் அறிமுகப்படுத்தினார். பிறகு நடிப்பு கலையும் அவருக்கு சிறப்பாக வருகிறது என்பதை உணர்ந்த கமல், நடிப்பில் பல உச்சங்களை தொட்டார். புதுப்புது தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
சினிமாவில் சம்பாதித்த வருமானத்தை, சினிமாவிலேயே முதலீடு செய்தவர் கமல்ஹாசன். அவரது கலை தாகத்துக்காக, ரசிகர்களின் சந்தோஷம், திருப்திக்காக மிக நல்ல படைப்புகளை தர, பல கோடிகளை இழந்தவர் கமல். என்றாலும் இதுவரை அவர் சோர்வடையவில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் மூலம் துவங்கி சத்யராஜ் முதல் சிவகார்த்திகேயன், சிம்பு வரை பிற ஹீரோக்களை வைத்தும் படம் எடுக்கிறார்.
ஆனால் ரஜினிகாந்த், பாபா படம் எடுத்து தோல்வியை சந்தித்தார். அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படம் தோல்வியடைந்தது. இது இரண்டுமே ரஜினிகாந்த் நடித்த படங்கள்தான். ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம், ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அனிமேஷனில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் விரும்பாததால் அந்த படமும் ஓடவில்லை.
ஆனால் இந்த இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு ரஜினி எடுத்த மிக முக்கிய முடிவு, இனிமேல் சொந்தமாக படங்கள் தயாரிக்க கூடாது என்பதுதான். அதனால் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தை லைகா நிறுவனம்தான் தயாரித்தது. அதே போல் இனி அவரது இளைய மகள் சௌந்தர்யா டைரக்ட் செய்ய உள்ள புது படத்தை, கலைப்புலி தாணு தான் தயாரிக்கிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் சிவகார்த்திகேயன், சிம்புவை நம்பி பல நூறு கோடிகளை செலவு செய்து, படம் தயாரிக்கிறார். தனது மகள் ஸ்ருதிஹாசன் எழுதி இயக்கும் இசை ஆல்பத்துக்கும் பல கோடிகளை கொடுத்திருக்கிறார். இதில் லோகேஷ் கனகராஜையும் நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த், சொந்த மகள்கள் இயக்கும் படங்களையே நம்பாமல், லைகா புரக்டசன்ஸ் சுபாஸ்கரன், தாணு போன்ற தயாரிப்பாளர்களிடம் தள்ளி விடுகிறார். நல்ல கலை வாழ விரும்பும் கமலிடம், பணம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ரஜினி, தோற்று போய்விட்டதாகவே நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





