- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் கதையை இன்னும் சரியாக பண்ணவில்லை... மேடையில் சிரித்துக் கொண்டே சீரியஸாக பேசிய ரஜினிகாந்த்......

லோகேஷ் கனகராஜ் கதையை இன்னும் சரியாக பண்ணவில்லை… மேடையில் சிரித்துக் கொண்டே சீரியஸாக பேசிய ரஜினிகாந்த்… என்னாச்சு தலைவரே…

- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜுனா, சோபின் சபீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வீடியோ ஒன்று வெளியானது. அதில் வெள்ளை கோட் அணிந்தபடி, நபர் ஒருவரை நாகர்ஜூனா சுத்தியலால் அடித்துக் கொள்ளும் காட்சி இடம் பெற்று இருந்தது.

 

- Advertisement -

இதன் மூலம் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வீடியோ வெளியானதும் லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இரண்டு மாதங்கள் கடின உழைப்பு ஒரு வீடியோ மூலமாக வீணாகிவிட்டதாகவும், தயவுசெய்து வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இதன் நடுவே, ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள திரை உலகில் இருந்து பகத் பாசில், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா, நடிகைகள் துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

 

படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் வருகிறார். இதன் டீசரில், ரஜினிகாந்த் என்கவுண்டரை ஆதரிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அதேசமயம் என்கவுண்டருக்கு எதிரான அதிகாரியாக அமிதாபச்சன் வருகிறார். கல்வித்துறையில் நடைபெறும் ஊழலை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், படத்தில் நடிப்பதற்காக பகத்ஃபாஸில் சம்பளம் கூட வேண்டாம் என்று கூறியதாக இயக்குனர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு டேட் இல்லாத காரணத்தினால் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று கூறினார்கள். இதையே தான் நான் தயாரிப்பாளரிடமும் கூறினேன். பிறகு எனது அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடமும் கூறினேன். அவர் சார் ப்ளீஸ் என்று தெரிவித்தார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவர் இன்னும் கதையை சரியாக பண்ணவில்லை என்று. இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்