- Advertisement -
Homeபொழுதுபோக்குசொன்ன தேதியில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கலா? அந்த விஷயம்தான் காரணமா? அப்போ...

சொன்ன தேதியில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கலா? அந்த விஷயம்தான் காரணமா? அப்போ அக்டோபர் 10ம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகுமா? – எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடித்த அவரது 170வது படம் வேட்டையன். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய்பீம் படத்தின் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சீனியர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வீடியோ வௌியாகி வைரலானது.

வேட்டையன் படத்தை வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்வதாக, லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த நாளில் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவர இருந்த கங்குவா படம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரஜினி படத்துடன் கங்குவா படமும் களத்தில் இறங்கினால் வசூல் வெகுவாக குறையும் என்பதால் கங்குவா அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகாது என தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் கோவையில் நடந்த தனது தம்பி கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, கங்குவா படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மூத்தவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருவதால், அவருக்கு ஒதுங்கி வழிவிடுவதே சிறந்த பண்பு என்று அறிவித்தார்.

இப்போது வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினிகாந்த், பலரை சுட்டுக் கொல்கிறார். அது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதால், அதற்காக ஒவ்வொரு தரப்பிலும் என்ஓசி எனப்படும் தடையின்மை சான்று பெற வேண்டி உள்ளது.

இப்படி ஒவ்வொரு காட்சிக்கும் பலரிடம் என்ஓசி வாங்க வேண்டியிருப்பதால் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகாது என்ற தகவல் பரவி வருகிறது. ஒருவேளை வேட்டையன் அந்த தேதியில் ரிலீஸ் ஆகாவிட்டால், முன்பே அறிவித்தபடி சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸ் ஆகலாம் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் என்ஓசி சான்றுகளை பெறுவதில் படக்குழு தீவிரம் காட்டுவதால், சொன்ன தேதியில் வேட்டையன் ரிலீஸ் ஆவதில் தாமதம் இருக்காது என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்