- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இணையும் படம்… சூப்பர் ஸ்டார் திடீர்ன்னு இப்படி சொல்லிட்டாரே… - கூலி படம்...

ரஜினி கமல் இணையும் படம்… சூப்பர் ஸ்டார் திடீர்ன்னு இப்படி சொல்லிட்டாரே… – கூலி படம் தந்த பாதிப்பா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கூலி. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பலத்த ஏமாற்றத்தை ரஜினி ரசிகர்களுக்கு தந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேற லெவல் சம்பவமாக கூலியை தருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பிரியாணிக்கு பதிலாக ஊசிப்போன பழைய சாதம் பரிமாறிய கதையாக இருந்தது.

இந்த சூழலில் ரஜினி கமல் இணையும் ஒரு படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தை டைரக்ட் செய்யப் போவதே லோகேஷ் கனகராஜ் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. விக்ரம் கூலி என கமல் மற்றும் ரஜினி என 2 பேரையுமே இயக்கியவர் என்பதால் அவருக்குதான் இந்த வாய்ப்பு என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் விக்ரம் படத்தை பொருத்த வரை கமலுக்கு பெரிய மாஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ், கூலி படத்தில் ரஜினியையும் மற்ற ஸ்டார் நடிகர்களையும் வீணாக்கி விட்டார் என்றுதான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். கதையே இல்லாமல் ஒரு கதையை உருவாக்கி கூலி படத்தை சொதப்பி விட்டார் என்றும் ரசிகர்கள் கூறினர். ரஜினிக்கே இதில் லோகேஷ் கனகராஜ் மீது கடும் அதிருப்திதான் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் நிறுவனங்கள் இணைந்து ஒரு படம் பண்றாங்க. அதுல கமலுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறேன்.

- Advertisement -

ஆனா இன்னும் டைரக்டர் பிக்ஸ் ஆகலே. ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணனும் என்பது ஆசை.அதுக்கு கரெக்ட்டான கதை கதாபாத்திரம் கிடைக்கணும். கிடைச்சா ஆக்ட் பண்ணுவோம். படம் பண்ணுற பிளான் இருக்கு. ஆனா டைரக்டர் இன்னும் முடிவாகலே. கதை கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகலே என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ரஜினி கூறிய இந்த ஓபன் ஸ்டேட்மென்ட் மூலம் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது தெளிவாகி விட்டது. கூலி படத்தை சொதப்பியதால் நிச்சயமாக ரஜினி மீண்டும் அவருக்கு வாய்ப்பு தர மாட்டார். ஒருவேளை நெல்சன் அல்லது மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் போன்றவர்களுக்கு வாய்ப்புள்ளது. கேஎஸ் ரவிக்குமார் சுரேஷ் கிருஷ்ணா போன்றவர்களும் லிஸ்ட்டில் இருக்கலாம்.

- Advertisement -

சற்று முன்