லோகேஷ் கனகராஜ் கடைசியாக எடுத்த லியோ திரைப்படம் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் போது அதன் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படமான விக்ரம் தான்.
அதில் எல் சி யூ என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி, ஒட்டுமொத்த ரசிகர்களின் தன் பக்கம் இழுத்தார் லோகேஷ் கனகராஜ். லியோ வேறு கேங்ஸ்டர் படம் எனக் கூறிவிட்டதால், படம் நிச்சயம் எல் சி யு வில் தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவருக்கு அந்தத் திட்டம் கொஞ்சம் கூட இல்லை என்பது படத்தை பார்க்கும் போது நமக்கு நன்றாகவே தெரிந்தது.
வேறு வழியில்லாமல் கிளைமாக்ஸில் எல் சி யுவிற்காக திரித்து இருப்பார் லோகேஷ் கனகராஜ். விஜய் வீட்டிற்கு காவலாளியாக வரும் அந்த நெப்போலியன் கதாபாத்திரமும், எல் சி யு வின் தாக்கமாக அமையவில்லை. இது ஒரு பக்கம் இருக்க படத்தின் இரண்டாம் பாதியிலும், நரபலி பழிக்குப் பழி என இயக்குனர் கோட்டை விட்டார்.
படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அது கடைசி ஏமாற்றத்தை தான் கொடுத்தது. இதன் காரணமாக தனது அடுத்த திரைப்படத்தில் மிகுந்த கவனத்துடன் திரைக்கதை எழுதி வருகிறார் லோகேஷ் கனகராஜ். முந்தைய திரைப்படமான லியோவின் அறிவிப்பு வீடியோவிலேயே அது எப்போது வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த முறை தவறை லோகேஷ் கனகராஜ் செய்யவில்லை.
கூலிப்பட அறிவிப்பு வீடியோவையே பார்த்து பார்த்து தான் அவர் பண்ணியிருந்தார். இதற்கான படப்பிடிப்பையும் அவர் மிக தாமதமாகவே தொடங்கி இருக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பீரியட் கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது. இந்த நிலையில் கூலி திரைப்படம் குறித்து பல விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருக்கிறார்.
அதில், எனது முந்தைய திரைப்படங்களான போதை பொருள் பற்றிய எந்த ஒரு பதிவும் இதில் இருக்காது. அதற்கு பதில் தங்கக் கடத்தலை பற்றி சொல்லி இருக்கிறோம். படத்தில் ரஜினிகாந்த்துக்கு நெகட்டிவ் கதாபாத்திரம். இதில் அவருடன் சத்யராஜும் நடிக்கிறார் என்று லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். தங்கக் கடத்தலை மையமாக வைத்தே இந்த திரைப்படம் எடுக்கப் போவதாக அவர் சொல்லியதை, பலரும் குறித்து வைத்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.





