நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரதான கதாநாயகன் கமல்ஹாசன் என்றாலும், படத்தில் அதிக முக்கியத்துவம் நடிகர் சிம்புவுக்குதான் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசனே, நடிகர் சிம்புவிடம் கமெண்ட் அடித்திருக்கிறார்.
அதாவது, தக்லைஃப் படம் ஆரம்பிக்கும்போது என்னுடைய படமாக இருந்தது. ஆனால் படம் முடியும் போது உன்னுடைய படமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாது. நடிகை திரிஷாதான் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இப்போது 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 50வது படம் மற்றும் டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் எஸ்டிஆர் 51வது படம் ஆகியன அடுத்து உருவாகின்றன.
இதில் ஓ மை கடவுளே படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. விஜய் சேதுபதி அசோக் செல்வன் ராம்திலக் ரித்திகா சிங் வாணி போஜன் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் கடவுள் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் டிராகன். நடிகர் பிரதீப் ரங்கநாதன் அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் ஆர்ஜே சித்து கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51வது படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
சிலம்பரசன் நடிக்கும் இந்த படத்துக்கு காட் ஆப் லவ் என டைட்டில் வைக்கப்பட்டுளளது. மேலும் இந்த படத்தில் இருந்து முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்தது போல் இந்த படத்தில் சிம்பு கடவுளாக நடிக்கிறார். அதுதான் காட் ஆப் லவ் என டைட்டில் உள்ளது. அதாவது காதல் கடவுளாக வந்து காதலர்களை சேர்த்து வைக்கும் கேரக்டர் என்கின்றனர். இதனால் சிம்பு ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் உள்ளனர்.





