தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்தில் ரஜினி விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டியும் மோதலும் ஏற்பட்டது. அந்த விவாகரத்துக்கு ரஜினி விஜய் முற்றுப்புள்ளி வைத்தாலும் இன்னும் விஜய் ரசிகர்களுக்கு ரஜினி மீது கோபமும் வெறுப்பும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் விஜய் முதல்வராக வெற்றி பெற்ற போது, ரஜினி மீது சில விமர்சனமும் எழுந்தது.
குறிப்பாக விஜய் முதல்வராக கூடாது என்பதற்காக திமுக – அதிமுக இரண்டு எதிர்கட்சிகளும் இணைந்து விஜய்க்கு எதிராக ஆட்சியமைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் முயற்சி செய்ததாகவும் ஒரு தகவல் பரவியது. அது உண்மை இல்லை. அவ்வளவு தரம் கெட்டவன் இந்த ரஜினிகாந்த் இல்லை என்று அவரே நேரடியாக விளக்கம் தந்துவிட்டார்.
மேலும் விஜய் மீது பொறாமைப்பட நான் அரசியலில் இல்லை. தேர்தலில் திமுக அதிமுக பாஜக என பெரிய கட்சிகள் இருந்தும் இவ்வளவு பெரிய வெற்றியை விஜய் சாதித்ததை நினைத்து ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். எனினும் ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சி இன்னும் விஜய் ரசிகர்களுக்கு குறையவில்லை.
இந்நிலையில் ஜெயிலர் 2 படம் வெளியானால் நிச்சயம் ரஜினிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தவெக தொண்டர்கள் கம்பு சுழற்றுவார்கள். படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை வைப்பார்கள். படத்தை மோசமாக விமர்சித்து முடிந்த அளவுக்கு ரஜினி மீதான கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
அதனால் படத்தின் இயக்குனர் நெல்சனிடம் இதுகுறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், எத்தனை முறை வேண்டுமானாலும் ரி ஷூட் நடத்துங்கள். நான் வந்து நடித்து தருகிறேன். எந்த காரணத்தை முன்னிட்டும் படத்தில் சிறிது கூட சொதப்பல் இருக்க கூடாது. படத்தில் எல்லா விஷயங்களிலும் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டும். எந்த லாஜிக் மிஸ்டேக்கும் இருக்க கூடாது. யாரும் குறை சொல்லாத அளவுக்கு படத்தை தரமாக உருவாக்குங்கள் என்று உத்தரவாகவே கூறியிருக்கிறார்.
மேலும் ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் இந்த படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது. அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்துக்கு எதிராக என்ன விமர்சனம் செய்தாலும் படம் அட்டகாசமாக இருந்தால் ரசிகர்கள் அந்த படத்தை பிளாக்பஸ்டர் வெற்றியாக்கி விடுவார்கள் என்று ரஜினி நம்புகிறார். அதனால் கூலி படம் போல சொதப்பாமல் உருவாக்குமாறு நெல்சனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.





