- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமைதியாக இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை; அதை கெடுக்கவே இப்படி செய்கிறார்கள் - சென்னை விமான நிலையில்...

அமைதியாக இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை; அதை கெடுக்கவே இப்படி செய்கிறார்கள் – சென்னை விமான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் கடந்தாண்டில் வெளியானது. அதன்பிறகு தனது 171 படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்தார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. கூலி படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முதன் முறையாக தனது படத்தின் 2ம் பாகமாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கேட்டுக்கொண்டதால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

கடந்த 2 மாதங்களுக்கு முன் சென்னையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்கிய நிலையில் முதல் ஷெட்யூல் 2 வாரங்களில் அங்கு முடிந்தது. அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக கேரளாவில் பாலக்காடு பகுதியில் உள்ள அட்டப்பாடி பகுதியில் ஷூட்டிங் நடந்தது. கடந்த சில தினங்களாக கோவையை அடுத்துள்ள ஆணைக்கட்டி மாங்கரை பகுதிகளிலும் ஷூட்டிங் நடந்தது.

இந்நிலையில் நேற்று ஆணைக்கட்டி பகுதியில் இருந்து காரில் ரஜினிகாந்த் மாங்கரை சென்ற போது, வழியில் இருந்த ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் ரஜினிகாந்த் சுவாமி வழிபாடு செய்தார். கோவில் முன் காரை நிறுத்திய ரஜினிக்கு கோவில் பூசாரி சிறப்பு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி நெற்றியில் விபூதி பூசினார். இந்த வீடியோ இணையத்தில் நேற்று வைரலானது.

- Advertisement -

இதையடுத்து ஜெயிலர் 2 படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து கோபமாக பேசினார். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது, தீவிரவாத செயல் என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காஷ்மீரில் அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி எல்லாம் செய்கிறார்கள். கண்டிப்பாக அதை செய்தவர்களுக்கும் அதன் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என அவர்கள் கனவிலும் நினைக்க கூடாது. அப்படி ஒரு பதிலடி செய்வார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்