- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் படப்பிடிப்பில் காயம் அடைந்த பிரபல நடிகை... அய்யய்யோ என்ன ஆச்சு... பதறிப்போன ரசிகர்கள்...

ரஜினிகாந்த் படப்பிடிப்பில் காயம் அடைந்த பிரபல நடிகை… அய்யய்யோ என்ன ஆச்சு… பதறிப்போன ரசிகர்கள்…

- Advertisement -

தமிழில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். தனது குழந்தை பருவத்திலேயே குத்துச்சண்டையில் ஆர்வம் உடைய அவர், அதில் திறன் பெற்று வீராங்கனையாக வலம் வந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சுதா கொங்கரா, இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே அவர் முதலில் இயக்கிய துரோகி திரைப்படம் படுதோல்வி அடைந்திருந்தது. அதிலிருந்து மீள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சுதா, குத்துச்சண்டையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தார். இதற்காக மாதவனை அவர் தேர்வு செய்ய, குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அதற்காக பல கட்ட தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டார்.

- Advertisement -

இப்படியான சூழல்தான், ரித்திகா சிங் சுதா கொங்கரா கண்ணில் பட, இறுதிச்சுற்றில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். மதி என்னும் கதாபாத்திரத்தில் சேட்டை கலந்த கதாநாயகியாக நடித்திருந்த அவர், குத்துச்சண்டையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் வெளுத்து வாங்கினார். முதல் படம் என்று கூற முடியாத அளவுக்கு அவர் நடிப்பு இருந்ததால் பலரும் அவரை பாராட்டினர்.

ரித்திகா சிங்கின் நடிப்பும் இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைய, அவர் வெள்ளித்திரையில் பேசப்பட்டார். இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனமாக இருந்து வந்தார் ரித்திகா சிங். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் கார்மேக குழலி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஓடவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தமிழில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரித்திகா சிங்கிற்கு மற்றொருமொரு பெயரை பெற்று கொடுத்தது. அனு என்ற கேரக்டரில் ரித்திகா சிங்கின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது. இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி உடன் கொலை என்ற திரைப்படத்திலும் அவர் நடித்தார். தற்போது ரஜினிகாந்தின் 170 வது படத்தில் அவர் இணைந்துள்ளார்.

ஜெய் பீம் ஞானவேல் இயக்கம் இந்தத் திரைப்படத்தில் ராணா, பகத் பாசில், அமிதாப்பச்சன், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதில் போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது கண்ணாடியில் அவர் விழுந்ததால் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் ரித்திகா சிங் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் படத்தில் அவர் காயம் அடைந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்