- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் குந்தவைக்கு அதிகரித்த வரவேற்பு, தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகும் திரிஷா…....

தமிழ் சினிமாவில் குந்தவைக்கு அதிகரித்த வரவேற்பு, தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகும் திரிஷா…. சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகைகளால் மட்டுமே நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடிகிறது. மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்த சில நடிகைகள் கூட அடுத்த சில ஆண்டுகளில் காணாமல் போய்விடுகின்றனர். இப்போதைய காலகட்டத்தில் ஒரு அறிமுக நடிகை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் நீடித்திருப்பதே கேள்விக்குறிதான்.

ஆனால் கடந்த 1970, 80களில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில் கதாநாயகிகளை பொருத்தவரை, படத்தின் கேரக்டர் என்னவோ அதில் மட்டுமே தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்துவர். கவர்ச்சி நடிகைககளாக அவர்கள் இல்லாததால், திருமணத்துக்கு பிறகும் கூட பல ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து நடிக்க முடிந்தது.

- Advertisement -

ஆனால் குஷ்பு, மீனா, ரோஜா, நக்மா போன்ற நடிகைகள் வருகைக்கு பிறகு கதாநாயகிகளே கவர்ச்சி நாயகிகளாகவும் மாறிவிட்டனர். பாடல் காட்சிகளில், தாராள கவர்ச்சி காட்டி நடித்தனர். அதனால் ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி மாறிய பின், அவர்களால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற முடியவில்லை.

இந்த சூழலில் இப்போது தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் நடிப்பில் நீடித்திருப்பது மட்டுமின்றி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டு இருப்பவர்கள் 2 பேர் மட்டும்தான். ஒருவர் நயன்தாரா, மற்றவர் திரிஷா. இவர்கள் 2 பேரும் 20 ஆண்டுகளாக மேலாக தமிழ் சினிமாவில் இப்போதும் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

- Advertisement -

விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்த பிறகு, திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அஜீத்குமாருடன் விடாமுயற்சி படத்திலும், தற்போது குட்பேட் அக்லி படத்தில் திரிஷாவே நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அத்துடன் தக்லைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள திரிஷா, இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் திரிஷா ஜோடி சேர்ந்து வருகிறார். அவரது போட்டியாளராக கருதப்படும் நயன்தாரா, தனுஷூடன் மோதல் போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி படத்துக்கு பிறகு 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்