- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழன் பிச்சை எடுக்க மாட்டான்…அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான் - ராஜ்யசபா எம்பியாக கர்ஜித்த...

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்…அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான் – ராஜ்யசபா எம்பியாக கர்ஜித்த நடிகர் கமல்ஹாசன்!

- Advertisement -

டெல்லியில் நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் நடிகர் மற்றும் ராஜ்யசபா எம்பி கமல்ஹாசன் பேசியதாவது, இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு.

கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார்.கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது.

- Advertisement -

பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். அது ஓரளவு உண்மைதான்.

- Advertisement -

தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே… தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது ‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. ‘வந்தீர் வென்றீர் செல்வீர்’ இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழும் நலமுடன் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்