- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் எஸ்டிஆர் 51 படம் - இன்னுமா ரெடி...

டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் எஸ்டிஆர் 51 படம் – இன்னுமா ரெடி ஆகலே? ஆரம்பமே இப்படி சொதப்புதே என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக நடிகர்கள் கமல்ஹாசன் சிலம்பரசன் இணைந்து நடித்த தக்லைஃப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. திரிஷா அசோக் செல்வன் அபிராமி ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். ஏஆர் ரகுமான் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

தக்லைஃப் படத்தை அடுத்து சிலம்பரசன் அடுத்து தனது 49வது படத்தில் நடிக்கிறார். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி ரோலில் நடிக்கிறார். அதே நேரத்தில் நடிகர் சிம்புக்கு சமமான படம் முழுவதும் அவர் வரும்படியாக ஒரு முக்கிய கேரக்டர் அவருக்கு தரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போல் நடிகர் சிம்புவே தயாரித்து நடிக்கும் எஸ்டிஆர் 50 படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். இந்த படம் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. சிம்புவின் அட்மின் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்கிறது. வரலாற்று கதையாக இந்த படம் மிக பிரமாண்டமாக உருவாகிறது.

இதற்கிடையே ஓ மை கடவுளே டிராகன் என 2 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது 51வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவிடம் ஏற்கனவே சிம்பு பேசியிருக்கிறார். ஆனால் இன்னும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் அஸ்வத் மாரிமுத்து தாமதித்து வருகிறார்.

- Advertisement -

ஓ மை கடவுளே மற்றும் டிராகன் என 2 வெற்றிப் படங்களை தந்த நிலையில், சிம்பு நடிக்கும் தனது 3வது படத்தை மிக சிறப்பாக கொடுக்க வேண்டும். சொதப்பி விடக் கூடாது என்பதில் அஸ்வத் மாரிமுத்து உஷாராக இருக்கிறார். அதனால் இன்னும் நான் படப்பிடிப்பு ரெடியாகலே, கதை ஸ்கிரிப்ட் பணிகள் கொஞ்சம் பாக்கி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே காலம் தாழ்த்தி வருகிறார்.

ஆனால் நடிகர் சிம்பு இதுபோன்ற தாமதங்களை விரும்பாதவர். மணிரத்னம் போலவே ஷார்ப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பவர். ஆனால் ஆரம்பத்திலேயே நான் இன்னும் படப்பிடிப்புக்கு ரெடியாகலே என தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறி தாமதம் செய்து வருவது, ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. ஆரம்பமே இப்படி சொதப்புதே என்றும் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்