- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், விவேக் பேசிய காமெடி டயலாக்கை வாழ்க்கையில் நிஜமாக்கிய பிரபல...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், விவேக் பேசிய காமெடி டயலாக்கை வாழ்க்கையில் நிஜமாக்கிய பிரபல சீரியல் நடிகை – என்ன தான் ஆச்சு இவருக்கு?

- Advertisement -

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3 சீரியல் மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்சிதா மகாலட்சுமி. அடுத்து பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். உப்புக்கருவாடு என்ற ஒரு படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில், கையில் துப்பாக்கியை பிடித்தபடி போலீஸ் கெட்டப்பில் அவரது புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகின. போலீஸ் கெட்டப்பில் மீண்டும் சினிமாவில் ரக்சிதா மகாலட்சுமி நடிக்கிறார்.

ரக்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த போது அவருடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஆனால் இன்னும் இருவரும் முறைப்படி விவாகரத்து பெறவில்லை.

- Advertisement -

ஆனால் ரக்சிதாவின் கணவர் தினேஷ், தன் மனைவி ரக்சிதாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் விரைவில் மீண்டும் வாழ்க்கையில் இருவரும் இணைவோம் என்றும் பேசி வருகிறார். ஆனால், ரக்சிதா தனது வலைதள பக்கங்களில், ஆண்களை நம்பி பெண்கள் வாழக் கூடாது. ஆண் துணையில்லாமலும், பெண்களாலும் சந்தோஷமாக வாழ முடியும் என்று பதிவிட்டு வருகிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6ல், ரக்சிதா மகாலட்சுமி போட்டியாளராக பங்கேற்றார். வீட்டுக்குள் அமைதியாக காணப்பட்ட அவரை பலரும், கடுமையாக விமர்சித்தனர். அமைதியாக இருப்பதுதான் என் இயல்பு. இங்கு நடிக்கவில்லை என்று கமலிடமே நேரடியாக கூறினார். அவரை வீட்டுக்குள் இருந்த டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் சுத்தி சுத்தி வந்தார். ஆனால் ரக்சிதா மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

இதுவரை டிவி சீரியல்களிலும், பிக்பாஸ் வீட்டிலும், பொது நிகழ்ச்சியிலும், படங்களிலும் மிகவும் ஹோம்லியான லுக்கில் காணப்பட்டவர் ரக்சிதா மகாலட்சுமி. பெரும்பாலும் புடவையில் அவர் காணப்படுவார். அவரது வலைதள பக்கங்களிலும் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோவிலும் அவர் சிறிதும் கவர்ச்சி காட்டியிருக்க மாட்டார்.

ஆனால் அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் பலத்த மாற்றம் தெரிகிறது. ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், உடல் பாகங்களை பளிச்சென காட்டும் விதமான டிரஸ்களை அணிய துவங்கியுள்ளார். மாடர்ன் டிரஸ்சிலும் அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார். எப்படி இருந்த ரக்சிதா, இப்படி மாறி விட்டாரே என அவரது ரசிகர்கள் ஆச்சரியம் காட்டுகின்றனர். சினிமா வாய்ப்புக்காக இப்படி மாறிவிட்டாரா, அல்லது தன் கணவரை வெறுப்பேற்ற இப்படி செய்கிறாரா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்