- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகைக்கு அடுத்த மாதம் டும் டும் டும்... கல்யாண மாப்பிள்ளை யாரு தெரியுமா...

பிரபல நடிகைக்கு அடுத்த மாதம் டும் டும் டும்… கல்யாண மாப்பிள்ளை யாரு தெரியுமா…

- Advertisement -

நடிகர் விஜயின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் கில்லி. இப்போது வரை இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்ததன் மூலம், திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கிலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதன் பிறகு பல அழகிப் போட்டிகளில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங், அதன் மூலம் சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பை வளர்த்து வந்தார். இவருக்கு தடையற தாக்க திரைப்படம், தமிழில் நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்தது. தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி எடுத்து வரும் மகிழ் திருமேனிதான் இதன் இயக்குனர். அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்த தடையற தாக்க திரைப்படம் தமிழ் சினிமாவில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் மூலம், தனக்கு அடுத்தடுத்த எதிர்பார்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த நடிகைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தலை காட்டி வந்த அவர், 2014 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் படு தோல்வியை அடைந்ததால் அவருக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைக்காமலேயே போனது.

இதனால் தமிழ் திரைப்பட உலகை விட்டு விட்டு தெலுங்கு படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நடிகை. அதற்கு ஏற்றது போலவே அவருக்கு பல்வேறு வெற்றி திரைப்படங்கள் வந்து குவிய ஆரம்பித்ததால் நம்பர் ஒன் நடிகை ஆனார். இப்படியான சூழலில், தமிழில் எச் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் ரகுல் பிரீத் சிங்.

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. போலீஸ் ஸ்டோரி ஆக எழுதப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆங்காங்கே காதல் காட்சிகளை வினோத் வைக்க, அதில் கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது அவர், சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதுபோக இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் பட தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இவர்களின் காதல் உறுதியாகி உள்ளது. ரகுல் பிரீத் சிங் – ஜாக்கி பக்னானியின் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி பக்னானி தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார். திரிஷாவின் மோகினி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்