- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாவதில் தாமதமா... உடனடியாக அந்த விஷயத்தை ராம் சரணும் சங்கரும் ஏற்றுக்...

கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாவதில் தாமதமா… உடனடியாக அந்த விஷயத்தை ராம் சரணும் சங்கரும் ஏற்றுக் கொண்டார்களா… உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம்தான்…

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. முதல் பாகமான இந்தியன் 1997 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது. இன்றைய தினம் வரை அந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியன் 2 அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.

 

பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியானது. ஆனால் அது ரசிகர்களை எந்த வகையிலும் கவரவில்லை. திரைக்கதை மிக மோசமாக இருந்ததாக ரசிகர்கள் பலரும் கூறினர். இதனால் இந்தியன் 2 திரைப்படம் இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளானது.

 

இதுபோக இந்தியன் 3 திரைப்படத்தையும் சங்கர் எடுத்து வைத்திருக்கிறார். இதுவும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

 

தமன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தான் இந்த திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். ராம் சரணுக்கு தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், கேம் சேஞ்சர் படத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அண்மையில் இந்த திரைப்படத்திற்கான தெலுங்கு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

 

மாவட்ட ஆட்சியரான ராம்சரணுக்கும், அந்தப் பகுதியில் அமைச்சராக இருக்கும் எஸ் ஜே சூர்யாவிற்கும் இடையேயான மோதல் தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஊழலை எதிர்க்கும் அரசு அதிகாரியான நாயகன், அவருக்கு குடைச்சல் கொடுக்கும் அமைச்சர் என இந்தக் கதை நகரும் என்று கூறுகிறார்கள். வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் அதில் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இயக்குனர் சங்கரும் நடிகர் ராம்சரணும் தங்களது ஊதியத்தை குறைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ராம்சரண் தனது சம்பளத்தை 65 கோடியாகவும், சங்கர் தனது ஊதியத்தை 35 கோடியாகவும் குறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடலுக்காக மட்டுமே சங்கர் 75 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்