- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடடா நடிகர் தனுஷூக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு கிடைத்து...

அடடா நடிகர் தனுஷூக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு கிடைத்து விட்டதா? – தர்மன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து இப்போது தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன் நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி உள்ளிட்டோரும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை நடிக்காத ஒரு வித்யாசமான கேரக்டரில் டாக்டராக ரஜினிகாந்த் இதில் நடிக்கிறார். மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து 2வது முறையாக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஆனால் பேட்ட படத்தில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினியுடன் சிம்ரன் நடித்திருந்தார். இந்த படத்தில் முழுமையான ரஜினியுடன் அவர் இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

மேலும் தர்மன் படத்தை நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவமனை செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஐதராபாத்திலும் மருத்துவமனை செட் அமைத்து ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

எப்போதுமே நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது என்பது தமிழ் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி பிற மொழிகளை சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கும் பெரிய கனவாக ஆசையாக இருக்கும். கூலி படத்தில் கூட பாலிவுட் நட்சத்திர நடிகர் அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா போன்றவர்கள் என்ன கேரக்டர் என்று கூட சில காட்சிகளில் ரஜினியுடன் நடித்து பெருமைப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வகையில் இப்போது உருவாகி வரும் தர்மன் படத்தில் தெலுங்கில் பிரபல நடிகராக உள்ள ராம் பொத்தினேனி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ராஷி கண்ணாவின் கணவராக ரஜினிக்கு மருமகனாக அவர் நடிக்கிறார். இதன்மூலம் ராஷிகண்ணா ரஜினியின் மகளாக நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருமகனாக வரும் ராம் பொத்தினேனி தான் படத்தில் பிரதான வில்லன் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ். ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்து விட்டார். இப்போது ரஜினியின் முன்னாள் மருமகன் ஆகிவிட்டார். தனது மாமனார் ரஜினியுடன் காலா படத்திலும் ஜெயிலர் படத்திலும் தனுஷ் நடிக்க மிகவும் விரும்பினார். ரஜினியின் மருமகனாக இருந்த அவருக்கே அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு தர்மன் படத்தில் ரஜினிக்கு மருமகனாகவே நடிக்கும் அரிய வாய்ப்பு அமைந்துவிட்டது.

- Advertisement -

சற்று முன்