- Advertisement -
Homeபொழுதுபோக்கு300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான தக்லைஃப் படத்தின் வசூல் நிலவரம்… பக்ரீத் பண்டிகை நாளில்...

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான தக்லைஃப் படத்தின் வசூல் நிலவரம்… பக்ரீத் பண்டிகை நாளில் கல்லா கட்டியது எவ்வளவு? – விண்வெளி நாயகனுக்கா இந்த நிலமை?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் இந்தியன் 2. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் பார்த்த ரசிகர்கள் அரண்டு போய்விட்டனர். இது உண்மையிலேயே ஷங்கர் இயக்கிய படம்தானா என்று பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பினர்.

இப்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படத்தை பார்த்த அவரது ரசிகர்களும் இது மணிரத்னம் இயக்கிய படம்தானா என்றுதான் அதிர்ச்சியாக கேட்டுள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு இணைந்து நடித்த இந்த படம், இந்தியன் 2 படம் கூட பரவாயில்லை என்று விமர்சிக்கும் அளவுக்கு படுமோசமாக வெளிவந்துள்ளது.

- Advertisement -

ரங்கராய சக்திவேல் நாயக்கர் கேரக்டரில் நடித்துள்ள கமலின் கேங்ஸ்டர் தலைவன் இடத்தை ஒரு கட்டத்தில் அவரது வளர்ப்பு மகன் அமரன் பிடிக்கிறார். அடுத்து கமலை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். கமல் இறந்தாரா, மீண்டும் வந்தாரா சதிகாரர்களை பழிவாங்கினாரா என்பதுதான் படத்தின் கதை. எந்த சுவாரசியமும் இல்லாத இந்த மொக்கை கதையை மணிரத்னம் இயக்கி ரசிகர்களிடம் வெறுப்பேற்றி இருக்கிறார்.

இதுவரை தமிழில் எந்த படமும் ரூ. 1000 கோடி இலக்கை எட்டி வசூலில் சாதனை படைக்கவில்லை. அதனால் தக்லைஃப் படம் அந்த சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த படம் மொத்தம் ரூ. 100 கோடி வசூலை எட்டுமா என்பதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஏனெனில் தக்லைஃப் படத்துக்கு ரசிகர்கள் வருகை சொற்பமாக தான் உள்ளது.

- Advertisement -

தக்லைஃப் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்திய அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் 17 கோடி ரூபாயாக இருந்தது. 2வது நாளில் அது 7.15 கோடி ரூபாயாக குறைந்தது. 3வது நாளான நேற்று பக்ரீத் பண்டிகை தினம். இந்த நாளில் நிச்சயமாக தக்லைஃப் படத்துக்கு வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று 6.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது.

இந்திய அளவில் நேற்று மொத்தம் 7.50 கோடி ரூபாய் மட்டுமே தக்லைஃப் படத்தின் வசூல் இருந்திருக்கிறது. அந்த வகையில் தக்லைஃப் படத்தின் 3 நாட்களின் மொத்த வசூல் நிலவரம் 32 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3 நாட்களில் தக்லைஃப் படம் வசூல் நிலவரம் மொத்தம் 26 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான தக்லைஃப் படத்தின் 3 நாள் வசூல் நிலவரம் இவ்வளவு மோசமாக உள்ளதே என்று கமல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்