தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரம்பா அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ஜானகிராமன் ராசி மின்சார கண்ணா அருணாசலம் என பல படங்களில் ரம்பா நடித்து முன்னணி நடிகையானார்.
காதலா காதலா உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றிப் படங்களில் நடித்த அவரை தொடையழகி ரம்பா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விட்டார். கணவர் பிள்ளைகள் குடும்பம் என இருந்த ரம்பா பல படங்களில் பல வெப் சீரிஸ்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டார்.
இந்நிலையில் கனடாவை விட்டு சென்னையில் வந்து நடிகை ரம்பா சமீபத்தில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கனடாவில் இனி வசிக்க வேண்டாம் என்று முடிவு செய்த ரம்பா சென்னையில் செட்டில் ஆக காரணம், சினிமாவில் மீண்டும் நடிப்பது அல்லது திரைப்படங்கள் தயாரிப்பு என்ற ரம்பாவின் ஆசைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நடிகை ரம்பாவின் கணவர் பெரிய தொழிலதிபர் என்றும் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் நடிகை ரம்பாவின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கவும் தயாரிக்கவும் இயக்கவும் பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அதனால் ரம்பாவை பலரும் இதுகுறித்து சந்தித்து பேசி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் ரம்பாவின் அண்ணன் சினிமா தயாரிப்பாளராக ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்தவர் என்பதால், ரம்பாவின் நலம் விரும்பிகள் பலரும் சினிமாவின் நிலை இப்போது மோசமாக இருப்பதால் படங்கள் தயாரித்து அதிக நஷ்டமடைய வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்துள்ளனர். அண்ணன் போல நீயும் கடனாளி ஆகி விடாதே என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலில் ஒரு சிலர் நடிகை ரம்பாவிடம் ஜோதிகா சிம்ரன் தேவயானி போன்றவர்கள் இப்போதும் நடிகைகளாக பீல்டில் உள்ளனர். நல்ல கேரக்டர்களில் நடித்தால் நீயும் 2வது சுற்றில் நல்ல நடிகையாக நடிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். நேற்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ரம்பா, சினிமாவில் நடிப்பதா சினிமா தயாரிப்பதா இரண்டில் எதை தேர்வு செய்வது என்ற பயங்கர குழப்பத்தில் ரம்பா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





