- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்; பிரபு நடித்த ராஜபுத்திரன் படம்...

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாள்; பிரபு நடித்த ராஜபுத்திரன் படம் பர்ஸ்ட் லுக் வெளியீடு – ரசிகரை தாறுமாறாக தாக்கிய ராம்குமாரால் வெடித்தது சர்ச்சை!

- Advertisement -

தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் எம் ஜி ஆர் சிவாஜி என்ற இரண்டு பேரும் வரலாற்று நாயகர்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்தனர். இருவரது படங்கள்தான் அன்று ரசிகர்களின் பலத்த வரவேற்பு பெற்ற வெற்றிப் படங்களாக இருந்தன.

அதன் பிறகுதான் 1980களில் ரஜினி கமல் காலம் தொடங்கியது. இப்போது விஜய், அஜித்குமார் படங்கள் அந்த வரிசையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. நடிகர் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அது தவிர 2 மகள்களும் உள்ளனர்.

- Advertisement -

ராம்குமார், இயககுனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பும் சில படங்களில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசனின் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொண்டவர் ராம்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது சென்னை அடையாறு தேஷ்முக் சாலையில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் முபெ சாமிநாதன், மா சுப்ரமணியன், சேகர்பாபு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிவாஜி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

- Advertisement -

இந்த விழாவில் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ராஜபுத்திரன் என்ற படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் கையில் ஏந்தி பிடித்திருந்தார். அப்போது முன்னாள் வர முண்டியடித்த ஒருவரை சிவாஜியின் மகன் ராம்குமார் சரமாரியாக தாக்கி உள்ளே தள்ளினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பியபோது வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை ராம்குமார் கோபத்துடன் தள்ளிவிட்டு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜிகணேசன் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபு நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் பிரபு புல்லட் செல்வது போலவும், அதற்கு பின்னால் நடிகர் வெற்றி சைக்கிளில் வருவது போல காட்சி அமைந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்