- Advertisement -
Homeபொழுதுபோக்குசொன்ன வாக்கை காப்பாற்றாத சிம்பு, ஊரார் முன் அசிங்கப்பட்ட சந்தானம், மனம் வருந்திய சிம்பு அதுக்கப்புறம்...

சொன்ன வாக்கை காப்பாற்றாத சிம்பு, ஊரார் முன் அசிங்கப்பட்ட சந்தானம், மனம் வருந்திய சிம்பு அதுக்கப்புறம் என்ன பண்ணார் தெரியுமா?

- Advertisement -

சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமே மிகப் பிரபலமானவராக அறியப்பட்டவர். தற்போது சந்தானம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது பலரும் அறிந்த ஒன்றே.

சந்தானம், சிம்புவின் “காதல் அழிவதில்லை”, “மன்மதன்” போன்ற திரைப்படங்களில் நடித்துதான் தனது கெரியரை தொடங்கினார். அந்த சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து நடிகர் காதல் சுகுமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

நடிகர் சந்தானத்திற்கு திருமணம் நிச்சயமானபோது தனது திருமணத்திற்கு சிம்புவை அழைக்க வைக்க வேண்டும் என்று சுகுமாரிடம் கூறினாராம். சிம்பு அந்த சமயத்தில் “மன்மதன்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது சுகுமார், சிம்புவிடம், “சந்தானம் உங்களுக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்” என கூற, சிம்பு, “சரி வரச்சொல்லுங்கள்” என கூறினாராம்.

அதன் பின் சந்தானத்தை சுகுமார் சிம்புவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். சிம்பு, சந்தானத்தை பார்த்தவுடன், “நான் உங்க ஃபேன் சந்தானம்” என்று சொல்லி கட்டிப்பிடித்தாராம். அப்போது சுகுமார், “இதுக்கு முன்னால் காதல் அழிவதில்லை படத்தில் இவர் நடித்திருக்கிறார்” என்று சிம்புவிற்கு ஞாபகப்படுத்தினாராம்.

- Advertisement -

உடனே சிம்பு, “அட ஆமா” என்று சொல்லிவிட்டு, “நிச்சயமா நான் கல்யாணத்திற்கு வருகிறேன்” என கூறியிருக்கிறார். சந்தானத்தின் திருமணம் நடக்க இருந்த நாள் அன்று, அவரது ஊரில் “சந்தானம் திருமணத்திற்கு சிம்பு வருகிறார்” என்று கட்டவுட்டுகள் வைக்கப்பட்டதாம். மேலும் சிம்புவை வரவேற்க அந்த ஊர்க்காரர்கள் பட்டாசுகளை தயார்படுத்தி வைத்திருந்தார்களாம்.

முகூர்த்த நேரம் நெருங்கப்போகும்போது, சுகுமார் சிம்புவுக்கு ஃபோன் செய்து, “சிம்பு, உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க, எப்போ வர்ரீங்க?” என்று கேட்க, அதற்கு சிம்பு, “ஏன், எதுக்காக காத்திருக்காங்க?” என கேட்டிருக்கிறார்.

சுகுமாரோ, “இன்னைக்கு சந்தானத்துக்கு கல்யாணம்ன்னு சொன்னோமே” என ஞாபகப்படுத்த, அதற்கு சிம்பு, “ஐயோ, நான் மறந்தே போயிட்டேன். இப்போ நான் சிங்கப்பூர்ல ஷூட்டிங்க்ல இருக்கேனே. நீங்க ஞாபகப்படுத்திருக்கலாமே” என சொல்லிவிட்டு, “நான் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே உனக்கு ஃபோன் பண்றேன்” என கூறி ஃபோனை வைத்துவிட்டாராம்.

காதல் சுகுமார், சந்தானத்திடம், “சிம்பு வருவது கஷ்டம்” என தயங்கி தயங்கி கூறியிருக்கிறார். சந்தானத்திற்கோ முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். அந்த ஊரார்கள் பலரும், “சிம்புலாம் எவ்வளவு பெரிய ஆளு, அவரெல்லாம் இவன் கல்யாணத்துக்கு வருவாரா?” என ஏளனமாக பேசத்தொடங்கிவிட்டனராம்.

இது சந்தானத்திற்கு மிகப் பெரிய அவமானமாக ஆகிவிட்டதாம். அதன் பின் சிம்பு சென்னை வந்தவுடன், சந்தானத்தை நேரில் சந்தித்து, “என்னை தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க, எனக்கு சத்தியமா ஞாபகமே இல்லை. நான் உங்களுக்கு எதாவது பண்ணி ஆகனுமே. நான் இப்போ மன்மதன்னு ஒரு படம் எடுத்துட்டு இருக்கேன். ஆனா ஷூட்டிங்க்லாம் முடிஞ்சிட்டு. இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு ஒரு காமெடி கேரக்டர் ரெடி பண்ணி ரீஷூட் போயிடலாம்” என கூறினாராம். அவ்வாறுதான் சந்தானம் “மன்மதன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்