- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியோட அந்த வீடியோவை யாராவது எடுத்துப் போடுங்கப்பா, படையப்பா நீலாம்பரியாக மிரட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்...

ரஜினியோட அந்த வீடியோவை யாராவது எடுத்துப் போடுங்கப்பா, படையப்பா நீலாம்பரியாக மிரட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன் வைத்த கோரிக்கை!

- Advertisement -

கடந்த 1986ம் ஆண்டில் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மலேசியா வாசுதேவன் சந்திரசேகர் பாண்டியன் வெண்ணிற ஆடை மூர்த்தி வினு சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்த படம் முதல் வசந்தம். இந்த படத்தில்தான் சத்யராஜ் பேசும் பல நக்கலான வசனங்கள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன.

குங்குமப் பொட்டுக் கவுண்டர் கேரக்டரில் சத்யராஜ், வேட்டைக்கார கவுண்டர் கேரக்டரில் மலேசியா வாசுதேவன் கேரக்டரில் இவர்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். ஆறும் அது ஆழம் இல்லே பாடல் இப்போதும் டிரண்டிங்கில் உள்ளது. இந்த படம்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் அறிமுகமான முதல் படமாகும்.

தொடர்ந்து பல படங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்த படம் படையப்பா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி படமாகும். இந்த படத்தில் ரஜினியின் அப்பா கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். அவரது கடைசி படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். இன்று வரை இந்த கேரக்டரை பலரும் பாரட்டி வருகின்றனர். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதே போல் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரும் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது, நான் இப்போது நிறைய புதுமுகங்களோடு நான் நடிக்கிறேன். அப்படி நடித்துவிட்டு இன்னிக்கு நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கிறதை பார்க்கும் போது படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பின் அவரது டிசிப்ளின் அவரோட டெடிகேசன் அவரோட பொசிஷன்ல அவர் ஒரு காட்சிக்கு நடிக்க தயாராகிற விதம் இதெல்லாம் ரொம்ப பிரமிப்பா இருக்குது.

அதை எல்லாம் ஒரு மேக்கிங் வீடியோ மாதிரி பண்ணி புதுமுக நடிகர்கள் இளம் வயது நடிகர்களுக்கு போட்டு காட்டணும். யாரெல்லாம் நடிகராக வேண்டும் விரும்புகிறார்களோ யாரெல்லாம் பெரிய ஸ்டார்ஸ் ஆகணும் என்று விரும்புகிறார்களோ அவங்க எல்லாம் இந்த மேக்கிங் வீடியோவை பார்த்து சத்தியமா நிறைய கத்துக்கலாம் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்