- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் டிவி சீரியலில் தஞ்சமடைந்த ஜெயிலர் பட நடிகை - பாடிய வாயும், ஆடிய காலும்...

மீண்டும் டிவி சீரியலில் தஞ்சமடைந்த ஜெயிலர் பட நடிகை – பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காதுன்னு சொல்வாங்களே

- Advertisement -

சினிமா, இன்றைய சூழலில் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கும் அட்சயப் பாத்திரமாக இருக்கிறது. சினிமா, அரசியல், விளையாட்டு ஆகிய மூன்று துறைகளில் இருப்பவர்கள்தான் விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர். விரைவில் கோடீஸ்வரர்களாக மாற்றி விடுகிறது.

அரசியலில் நுழைய பின்புலம் தேவையாக உள்ளது. விளையாட்டில் சாதிக்க திறமை அவசியமாகிறது. ஆனால், சினிமாவில் சாதிக்க நடிக்கிற வாய்ப்பும், நேரமும், அதிர்ஷ்டமும் கூடி வந்தால், அடுத்தடுத்த படங்களில் முன்னணி இடத்துக்கு வந்துவிடுகின்றனர்.

ஆனால், இந்த நடிகை அப்படியல்ல. தனது அபார நடிப்புத் திறமையால், அழகால் ரசிகர்களின் மனதை வசீகரித்தவர். இயக்குநர் மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில் தான், அறிமுக நடிகையாக ரம்யாகிருஷ்ணன் அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து, கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த ரம்யா கிருஷ்ணன், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதிலும் குறிப்பாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா படம் மூலம், நீலாம்பரி கேரக்டரில் நடித்து அசத்தினார்.

இதில் ரஜினியை எதிர்த்து நடித்து நீலாம்பரி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பு பலத்த பாராட்டை பெற்றது. இப்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில், ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். படையப்பாவில் ரஜினியை எதிர்த்த அவர், ஜெயிலர் படத்தில், ரஜினியை பார்த்து மிரண்டு போனவராக நடித்திருந்தார்.

இந்நிலையில், 52 வயதுகளை கடந்த ரம்யாகிருஷ்ணனுக்கு படங்களில் தொடர்ந்து வாய்ப்பு இல்லாததால், மீண்டும் டிவி சீரியலில் நடிக்க துவங்கி விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் வம்சம், தங்கம் தொடர்களில் நடித்த அவர், இப்போது நளதமயந்தி என்ற தொடரில் நடிக்கிறார். வரும் 9ம் தேதி முதல், ஜீ டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.

சற்று முன்