இந்திய சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் யார் என்றால் அது நிச்சயம் இயக்குனர் மணிரத்னம் தான். தனக்கே உண்டான தனித்துவத்தின் மூலம் இன்றைய தலைமுறையினரும் விரும்பும் வகையில் புதிய திரைப்படங்களை அவர் இயக்கி வருகிறார். கார்த்தியை வைத்து அவர் இயக்கிய காற்று வெளியிடை படுதோல்வியை சந்தித்தது.
இதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இயக்குனருக்கு வெற்றியை கொடுத்தன. இப்படியான சூழலில் தான் அவர் தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைப் படத்தை இயக்கி இருக்கிறார்.
இருவரும் இணைந்து 1988 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படத்தை கொடுத்தனர். கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து தக் லைப் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறது. இதன் அறிமுக வீடியோவே பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதில் கமல்ஹாசன் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அறிமுகம் செய்து கொண்டார். அதில் கமல் பேசும் வசனங்களிலேயே, தக் லைப் திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் மூவி என்பது தெரியவந்தது. படத்தில் திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு வருகிறார்.
அவர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் அசோக் செல்வன் தக் லைப் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். முதலில் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர்தான் நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் நான்கரை மாதங்களிலேயே இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து இருக்கிறார் மணிரத்னம்.
இப்படியான சூழலில் தான் பாடல் ஒன்றை சூட் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரிஷாவை வைத்து எடுக்கப்படும் இந்த பாடலின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாலனே பாடல் ஸ்டைலில் இது எடுக்கப்படுகிறதாம். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அனேகமாக, இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.





